
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விஜய பாண்டி (வயது40) – மனைவி ரூபாலா (வயது34) தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி 14 வருடங்கள் ஆன நிலையில், ஒரு பெண் குழந்தை உள்ளார். விஜய பாண்டி தனது மனைவி ரூபாலாவை பிரிந்து வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக தெரியவருகிறது. இந்நிலையில், தனது குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த ரூபாலா மனு ஒன்றை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளார்.
ந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது; எனது கணவர் விஜய பாண்டி, முறைகேடாக அரசு மதுபானங்களை வாங்கி கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார். மேலும் வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு குடும்பத்தை கவனிப்பதில்லை, வீட்டிற்கும் சரிவாரியாக வருவதில்லை.
இதுதொடர்பாக எரியோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்யும் என் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார். தனது கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் பூங்கொடியிடம் அளித்துள்ளார். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
ஆ.இர.விஜயஷங்கர்
ஆசிரியர் - போர்முனை

More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line