November 21, 2024

மாநகர நல அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க சுகாதார ஆய்வாளர்கள் புகார்

திண்டுக்கல் மாநகராட்சியில் பணியாற்றி வரும் மாநகர நல அலுவலர் பரிதாவாணி என்பவர் மாநகராட்சி மண்டலங்களில் பல்வேறு சுகாதாரப் பணி செய்ய விடாமல் தடுப்பது, அநாகரீகமாக பேசுவது என பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக திண்டுக்கல் மாநகராட்சி மாநகர நல அலுவலர் பரிதாவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொது சுகாதார பிரிவில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்கள், அலுவலர்கள் மாநகராட்சி மேயர் இளமதியிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

திண்டுக்கல் மாநகராட்சி பொது சுகாதார பிரிவில் பணியாற்றும் சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதியிடம் கொடுத்த மனுவில், நாங்கள் நகரின் துாய்மையை பராமரித்தல், மக்கும் குப்பையை உரமாக்குதல், பொது மக்கள் குடிநீரில் குளோரின் கலப்பது, பிறப்பு – இறப்பு சான்றிதழ்கள் தயாரிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு சுகாதார பணிகளை செய்கிறோம். மாநகர் நல அலுவலர் பரிதாவாணி, எங்கள் செயல்பாடுகளை தடுக்கும் விதமாக செயல்படுகிறார். ஏரியா வாரியாக லஞ்சப் பணம் வசூலிக்க கூறுகிறார். அதை கேட்காமல் இருப்பவர்களை அவமரியாதையாக பேசுகிறார். பிறப்பு – இறப்பு சான்றிதழ்கள் வழங்காமல் இழுத்தடிக்கிறார். மேலும் அடிக்கடி எங்களை தரக்குறைவாக பேசுகிறார். அவரது அறைக்குள் அலுவலகத்திற்கு சம்பந்தமில்லாத நபரை வைத்து கொண்டு மிரட்டும் தொணியில் பேசி வருகின்றார். இந்நிலையில் மாநகர நல அலுவலர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக திண்டுக்கல் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மாநகர் நல அலுவலர் பரிதாவாணி மீது மேயர் இளமதியிடம் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில்.

இதுகுறித்து திண்டுக்கல் மாநகர் நல அலுவலர் பரிதாவாணி தன் மீது மேயரிடம் புகார் அளித்திருந்த நிலையில். தாற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார் ;- புகாரில் உண்மை இல்லை. பொது மக்களுக்கான சுகாதாரப் பணிகளை செய்து கொடுக்க சில அலுவலர்கள் பண வசூலில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து அலுவலர்களிடம் விசாரித்தேன். அதனால் திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர் என்று தெரிவித்தார்.