
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், கேளூர் கிராமத்தை சேர்ந்த திரு.இந்தியன் என்பவர் டெலிகிராம் செயலியின் (Telegram) மூலம் தெரியாத நபரிடமிருந்து Part Time Job-க்கு (Work form home) குருஞ்செய்தி (SMS) வந்ததாகவும் அதில் கூறும் Task-ஐ செய்தால் பணம் பெறலாம் என கூறியதாகவும், இதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி, அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தியுள்ளார். பின்பு தான் முதலீடு செய்த பணத்தை எடுக்கலாம் என்று link-ல் சென்ற போது கூடுதலாக பணத்தை முதலீடு செய்ய அறிவுறுத்தப்பட்டதாகவும், பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
பின்னர் இந்தியன் போலியான இணையதளத்தில் பணத்தை இழந்ததை அறிந்து உடனடியாக இழந்த பணத்தை மீட்டு கொடுக்குமாறு சைபர் கிரைம் பண மோசடி புகார் எண் 1930 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.M.பழனி அவர்களின் தலைமையிலான சைபர் கிரைம் போலிசார் உரிய விசாரணை செய்து துரிதமாக செயல்பட்டு அவர்கள் இழந்த
பணத்தை வங்கியின் உதவியுடன் மீட்டனர்.
மேற்படி இன்று (28.06.2024) திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் அறிவுறுத்தலின்படி, சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.M.பழனி நேரில் அழைத்து மீட்கப்பட்ட பணம் ரூ.6,19,628/- ஐ உரியவரிடம் ஒப்படைத்தார்.
சரவணன்
செய்தியாளர் போர்முனை
திருவண்ணாமலை

More Stories
Еженедельные акции в казино Pinco: как не упустить шанс?
Скачать Мостбет Приложение Для Android И Ios
mostbet এর কাজ কি: সদস্য হওয়ার প্রয়োজন কি?