November 18, 2024

சாத்தனூரில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர்கள் அதிரடி கைது

வேலூர் வனமண்டல வனப்பாதகாவலர் திருமதி. பத்மா அவர்களின் அறிவுரையின்படியும் மற்றும் மாவட்ட வன அலுவலர்
திரு. யோகேஷ் கர்க் அவர்களின் உத்தரவின்படியும்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள சாத்தனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில்
இன்று 28/6/2024 அதிகாலை சாத்தனூர் வனச்சரக அலுவலர்
நா.ஸ்ரீனிவாசன் தலைமையில்
வனவர் முருகன் வனக்காப்பாளர்கள் ஏழுமலை, பலராமன் ,வெங்கடேசன் மற்றும் ரவி ஆகியோர் அடங்கிய குழுவினர் வனவிலங்கு வேட்டை தடுப்பு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்,

அப்போது சாத்தனூர் அருகே உள்ள பெண்ணையார் காப்புக்காடு சொற்பனந்தல் மேற்கு பீட்டில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக இரண்டு நபர்கள் செங்கம் பகுதி சேர்ந்த மணிகண்டன் ( வயது 35) மற்றும் விஜய்( வயது 23) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தனர் அவர்களை கண்காணித்து சுற்றி வளைத்து மிகுந்த போராட்டத்திற்கு ஒரு நபரை சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டது,
மற்றொரு நபர் தப்பி ஓடிவிட்டார்,
பிறகு தப்பி ஓடிய நபரையும் தீவிரமாக தேடி கண்டுபிடிக்கப்பட்டது,

பின்பு அவர்கள் இருவரையும் கைது செய்யப்பட்டது, பிறகு அவர்களிடமிருந்த உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி ஒன்று, நெத்திலைட், சார்ஜர் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது,

பிறகு அவர்களை
சாத்தனூர் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை செய்து மாவட்ட வன அலுவலர் அவர்களின் உத்தரவின் படி இருவரையும் தமிழ்நாடு வனச்சட்டம் மற்றும் வன உயிரின பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.