செங்கத்தில் கூலிப்படை ஏவி மாமனாரே மருமகனை கொலை முயற்சியால் பரபரப்பு. மாமனார் மற்றும் அவரது மகன் இருவர் கைது

.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஜி.
இவர் செங்கம் பெங்களூர் ரோட்டில் இயங்கி வரும் வெங்கடேசவரா பெட்ரோல் பங்கில் தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்த காளி கோயில் பூசாரி ஜானகிராமன் மகள் ஜெயஸ்ரீ என்பவரும் காதலித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து தனி குடித்தனம் நடத்தி வருகின்றனர்

இந்த நிலையில் காதல் திருமணத்தை எதிர்த்து வந்த காளி கோயில் பூசாரி தனது மருமகனான விஜி என்பவரை கூலிப்படை மூலம் கொலை செய்ய சில நாட்களாக நோட்டமிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு விஜி பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் விஜியை சரமாரியாக வெட்டி உள்ளனர்.

மேலும் தடுக்க சென்ற மற்றொரு ஊழியரையும் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்
இரத்த வெள்ளத்தில் சாய்ந்த விஜயை உடன் வேலை பார்க்கும் ஊழியர்கள் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து வந்த செங்கம் காவல்துறையினர் பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி ஹார்ட் டிஸ்க் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து விஜியை கொலை செய்ய முயன்ற காளி கோயில் பூசாரி ஜானகிராமன் மற்றும் அவரது மகன் ராஜேஷ் இருவரும் செங்கம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இச்சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சரவணன்
திருவண்ணாமலை
போர்முனை

More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line