ஆரணி சொத்து மதிப்பு சான்று பெற கையூட்டு பெற்ற ஆரணி வட்டாட்சியர் மற்றும் இரவு காவலர் ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை இரவு விஜிலென்ஸ் துறையினர் கைது செய்தனர்.

ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் காட்டுகாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பா மகன் சீனிவாசன்(54) என்பவர் 10-ம் வகுப்பு வரை படித்து தன்னுடைய தாயார் கண்ணம்மாள் பெயரில் சொத்து மதிப்பு சான்று பெற்று அரசு ஒப்பந்த டெண்டர் கிளை எடுத்து ஜீவனம் செய்து வருகிறார்

இவர் ரூ.20 லட்சம் மதிப்பிலான சொத்து மதிப்பு சான்று பெற அரசிற்கு செலுத்த வேண்டிய ரூ.7900 ரூபாய் வங்கியின் மூலமாய் காசோலை எடுத்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர். ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பரிந்துரை பெற்று கடந்த 13.06.2024 ஆம் தேதி ஆரணி வட்டாட்சியர் மஞ்சுளா அணுகும் போது ரூ.20 லட்சம் சொத்து மதிப்பீடு சான்று பெற ரூபாய் 20 ஆயிரம் லஞ்சமாக கேட்டு உள்ளார். பின்னர் அவரிடம் அவ்வளவு தொகை இல்லை என்று சொல்லவே குறைத்து ரூபாய் பத்தாயிரம் கொடுத்தால் மட்டுமே என்னால் சான்று வழங்க முடியும் என்று திருப்பி அனுப்பி விட்டார். மனமுடைந்த சீனிவாசன் வேறு வழி இல்லாமல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்து வெள்ளிக்கிழமை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் காவல் ஆய்வாளர் மைதிலி, உதவி ஆய்வாளர் கோபிநாத் மற்றும் தலைமை காவலர்கள் குணா, பன்னீர், தினேஷ், ரஜினி, தேவேந்திரன் மற்றும் பெண் காவலர் ஷீலா கொண்ட குழுவினர் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் சென்று அணுகிய போது கொண்டு வந்த லஞ்சப் பணத்தை சீனிவாசன், இரவு காவலர் பாபு என்பவரிடம் கொடுக்க சொல்ல ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விஜிலன்ஸ் டிஎஸ்பி வேல்முருகன் மற்றும் காவல் ஆய்வாளர் மைதிலி ஆகியோர் அவர்களிடமிருந்து கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இருவரையும் கைது செய்யப்பட்டு அவர்களிடமும், அவர்கள் வீட்டிற்கும் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் ஆரணியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

More Stories
Steps to build a powerful profile on Filipino dating apps
Indonesian dating apps vs Indonesian dating sites: which performs better?
Exploring Legit Sugar Daddy Apps That Send Money