
பண்ருட்டி. ஜீலை.02. பூரண மதுவிலக்கு கோரி பண்ருட்டியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி எம் ஷேக் தாவூத் தலைமை தாங்கினார். நகர செயலாளர் அப்துல் கபூர் இறை வசனம் ஓதி நிகழ்ச்சி துவங்கி வைத்தார்.
நகரத் தலைவர் முகமது காசிம் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில தலைமை பிரதிநிதி தைமியா சிறப்பு கண்டன உரை நிகழ்த்தினார்.
விடுதலை சிறுத்தை கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி , ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மற்றும் போலீஸ் லைன் பள்ளி இமாம், பண்ருட்டி திருச்சபையின் தேவதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது கண்டன உரையை பதிவு செய்தனர். இறுதியாக நகர செயலாளர் அலாவுதீன் நன்றி கூறினார்.
முருகானந்தம்
செய்தியாளர் மக்கள் குத்து
கடலூர்

More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line