November 17, 2024

கந்தர்வகோட்டை அருகே தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக சிறு கோள்கள் தினம் கடைபிடிக்கப்பட்டது.

கந்தர்வகோட்டை ஜீலை 04.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் நம்புரான்பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக சிறுகோள்கள் தினம் கடைபிடிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அறிவியல் இயக்க கிளைச் செயலாளர் சரண்யா அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய வட்டாரச் செயலாளர் ரகமதுல்லா உலக சிறுகோள்கள் குறித்து பேசியதாவது

நம் சூரியக் குடும்பத்தில் கோள்கள் மட்டுமன்றி சிறுகோள்களும் சுற்றி வருகின்றன. இந்தச் சிறுகோள்கள் சூரியக் குடும்பம் உருவானபோது சிதறடிக்கப்பட்ட வான்பொருள்களால் உருவானவை. இவை கோள்களைப் போன்று ஒரு குறிப்பிட்ட வடிவம் கொண்டவை அல்ல. வடிவிலும் அளவிலும் வித்தியாசமானவை. சிறு பந்து அளவிலிருந்து சிறு நாடு அளவுக்கான சிறுகோள்கள் காணப்படுகின்றன. இந்தச் சிறுகோள்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படவும், இவற்றை அடையாளம் கண்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், இவற்றிலிருந்து நம் பூமியைப் பாதுகாக்கவும் ‘உலக சிறுகோள் நாள்’
ரஷ்யாவின் சைபிரியாவில் 1908 ஆம் ஆண்டு நிகழ்ந்த துங் குஸ்கா நிகழ்வின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 30 ல் உலக சிறு கோள்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபை 2016 இல் தீர்மானத்தை நிறைவேற்றியது மூலம் அதிகாரப்பூர்வமாக இந்த நாளை ஏற்றுக் கொண்டது.
உலக சிறு கோள்கள் தினத்தின் நோக்கம் சிறுகோள்கள் மற்றும் அவை பூமியின் மேற்பரப்பை தாக்கியதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை பற்றி அறிவதாகும் என்று பேசினார்.
மாணவர்களுக்கு துளிர் இதழ் பரிசளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அறிவியல் உறுப்பினர்கள் பிரபா, தேவிப்பிரியா, கயல்விழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.