
பண்ருட்டி.ஜுலை.05. கடலூர் மாவட்டம் பண்ருட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் மரக் கன்றுகள் நடும் விழா பூங்குணம் பூமுடையார் அய்யனார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. லயன் சங்க தலைவர் அருண் கார்த்திக் தலைமை தாங்கினார். லயன் கிளப் பவுண்டேசன் தலைவர் & எஸ். வி. ஜுவல்லரி வைரக்கண்ணு முன்னிலை வகித்தார். ஸ்ரீ ராம் பேட்டரி ராஜசேகர், பூங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் செல்வி செல்வமணி மரக் கன்றுகள் நட்டு வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

ஆலயத்தில் எதிரே பயன் தரும் 600 மரக்கன்றுகள் நடப்பட்டது.
லயன் சங்க செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் சீனுவாசன், லயன் சங்க நிர்வாகிகள் வீரப்பன், திரு, சரஸ்வதி எலக்ட்ரானிக்ஸ் லயன்.முருகதாஸ், வைரக்கண்ணு, ராஜவேல், சுப்ரமணியன், அசோக் ராஜ், கிருஷ்ண மூர்த்தி, சங்கர், மேகவண்ணன், ஆனந்த் பாபு, பூங்குணம் , மனவளக்கலை மன்ற பரிமளரங்கன், அப்துல் கலாம் இயக்கம் சுதாகர், சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுனர்கள் கெளரி பாபு, மணிமேகலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முருகானந்தம்
செய்தியாளர் மக்கள் குத்து
கடலூர்

More Stories
Еженедельные акции в казино Pinco: как не упустить шанс?
Скачать Мостбет Приложение Для Android И Ios
mostbet এর কাজ কি: সদস্য হওয়ার প্রয়োজন কি?