
பண்ருட்டி. ஜீலை.09. முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் குரு பூஜை விழா மற்றும் யாதவ சமுதாய பொதுக்கூட்டம் பண்ருட்டியில் நடைபெற்றது. யாதவ மகாசபை கடலூர் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் நாராயண மூர்த்தி, இளைஞரணி தலைவர் ராம்குமார்,மாவட்ட துணை தலைவர் சஞ்சீவி, மாவட்ட பிரதிநிதி பாலாஜி, மாவட்ட செயற்குழு சுகுமார், இளைஞரணி செயலாளர் பாலாஜி முன்னிலை வகித்தனர்.

இதில் தேசிய செயலாளர் Er. R. J. D. பாஸ்கர் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராக மூத்த வழக்கறிஞர் சீனுஜெயராமன் கலந்து கொண்டு யாதவ சமுதாய பெருமைகளை எடுத்துரைத்தார்.

கூட்டத்தில் தேசிய செயலாளர் பாஸ்கர் யாதவ் பேசியதாவது: இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னர் நடைபெற்ற தேர்தலில் பல்வேறு மாநிலங்களில் முக்கிய பதவி வகிப்பவர்கள் யாதவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களே, யாதவ சமுதாய இல்லாத கேபினட் அமைச்சரவை இதுவரை அமைந்ததில்லை. மத்திய அரசில் தற்போது 4 கேபினட் அமைச்சர்கள் உள்ளனர். 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்தியாவில் அனைத்து மாநில சட்டமன்றத்தில்
யாதவ சமுகத்தினர் சட்டமன்றத் உறுப்பினர்களாக உள்ளனர். 37 வயதில் யாதவ மகாசபை யில் தேசிய செயலாளராக உள்ளவன் நான் ஒருவன் தான். யாதவ மகாசபை இந்திய அளவில் யாதவ சமுதாய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெற்று தருகின்றனர். மருத்துவ படிப்பு, முதுகலை பட்டம் பெற கல்வி உதவித் தொகை நான் பெற்றுக் தருகிறேன். சமீபத்தில் பண்ருட்டியில் நாங்கள் எடுத்த கணக்கெடுப்பின்படி அண்ணா கிராமம் உட்பட 56 கிராமங்களில் 31.000 யாதவ மக்கள் வசிக்கின்றனர். அதில் ஒருவர் கூட அரசு பணியில் இந்த தலைமுறையில் சேரவில்லை.
கரும்பூர் 90 குடும்பங்கள், ஒறையூர் 24, கொய்யாத்தோப்பு- 12, புதுப்பேட்டை-24, சித்திரை சாவடி 118, பண்ருட்டி 268, கனிசப்பாக்கம்- 28, தட்டாம்பாளையம்-18, மேல்பட்டாம்பாக்கம்- 12, விஸ்வநாதபுரம் 29, இடையர் குப்பம்- 45, பாலூர்- 8, குச்சிப்பாளையம்- 10, என 56 கிராமங்களில் 31, 000 மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆனாலும் கல்வியிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். நமது பிள்ளைகள் 100 க்கு 90 மார்க் எடுத்திருந்தாலும் அரசு வேலை கிடைப்பதில்லை. காரணம் யாதவ சமுதாயம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் உள்ளதால். இட ஒதுக்கீட்டில் நமது பிள்ளைகள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடம் முடியாமல் உள்ளனர். ஆகவே யாதவ சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்த கூட்டத்தில் வாயிலாக அரசை கேட்டு கொள்கிறேன். பண்ருட்டியில் எனது வீட்டில் அரசு பணியில் ஓய்வு பெற்ற நமது யாதவ சமுதாயத்தினரை வைத்து டிஎன்பிஎஸ்சி, ஆர் ஆர் பி போன்ற அரசு பணி தேர்வுக்கு இலவசமாக ஆன்லைன் வகுப்பு எடுக்க உள்ளோம். நமது சமுக பிள்ளைகளை சேர்ந்து பயன்பெற வேண்டும். என்று பேசினார். முன்னதாக பண்ருட்டி யூனியன் அலுவலகம் அருகில் இருந்து இருசக்கர வாகனத்தில் யாதவ சமுதாய இளைஞர்கள், நிர்வாகிகள் பேரணியாக வருகை தந்து நான்கு முனை சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த வீரன் அழகு முத்துக்கோன் திருஉருவப் படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தி வீரவணக்கம் செலுத்தினார்.
நிகழ்ச்சியில் அண்ணா கிராமம் ஒன்றிய தலைவர் செந்தில்குமார், ஒன்றிய துணைத்தலைவர் விக்கி, பண்ருட்டி நகர தலைவர் வெங்கடேசன்,நகர செயலாளர் தமிழ், நகர இளைஞரணி தலைவர் ஸ்ரீராம் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் சித்திரைசாவடி வெங்கடேசன், செந்தில்குமார், பூங்குணம் நாகராஜன் மற்றும் இடையர் குப்பம் கலைச்செல்வன், ராம்குமார் மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முருகானந்தம்
செய்தியாளர் மக்கள் குத்து
கடலூர்

More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line