November 21, 2024

அக்கச்சிபட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிப்பு.

கந்தர்வகோட்டை ஜீலை 12

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்பட்டது. தன்னார்வலர் நித்தியா அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா உலக மக்கள் தொகை தினம் குறித்து பேசும் பொழுது
ஜூலை 11 அன்று அனுசரிக்கப்படும் உலக மக்கள்தொகை தினம் 1989 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தால் தொடங்கப்பட்டது, நமது வளர்ந்து வரும் உலகளாவிய மக்கள்தொகையின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், அதனால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தீர்வுகளை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தால் உணவு, நீர், எரிசக்தி, தங்குமிடம் போக்குவரத்து போன்றவைகளுக்கான தேவை அதிகரித்து சுற்றுச்சூழல் சூழலுக்கு சீர்குலைவுக்கு வழி வகிக்கிறது.
மக்கள் தொகையினால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது என்று பேசினார்.