November 28, 2024

மணப்பாக்கம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சாகைவார்த்தல் & செடல் திருவிழா

பண்ருட்டி. ஜுலை.13. கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மணப்பாக்கம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சாகைவார்த்தல்& செடல் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வெகு விமரிசையாக நடைபெற்றது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக செடல் திருவிழா நடைபெற்றது.

உற்சவர் அம்மனை தோலில் சுமந்து கிராமத்தின் முக்கிய வீதி வழியாக ஊர்வலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து, சிலர் பக்தர்கள் அலகு குத்தியும், வேனை இழுத்து நேர்த்தி கடன் செலுத்தி ஊர்வலமாக வந்தனர். தங்கள் வீட்டு கால்நடைகளுக்கு செடல் அணிவித்து நேர்த்தி கடன் செலுத்தினார்கள். பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மஹா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் மணப்பாக்கம் கிராம முக்கிய பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.