இப்போதெல்லாம் வங்கிகளில் அக்கவுண்ட் திறப்பது என்பது மிகவும் எளிதாகிவிட்டது. பரவலாக மக்கள் ஒன்றிற்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்துள்ளனர். இதனால் சிலர் கணக்குகளை தொடங்கி பயன்படுத்தாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். இரண்டு வருடங்களுக்கு மேலாக, எந்த பரிவர்த்தனையும் மேற்கொள்ளாமல் செயல்பாட்டில் இல்லாத பேங்க் அக்கவுண்ட்களின் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாத காரணத்தினால் விதிக்கப்படும் மினிமம் பேலன்ஸ் கட்டணத்தை (Minimum balance maintenance charge) இனி விதிக்க கூடாது என்று ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.
உங்களுடைய மினிமம் பேலன்ஸ் காரணமாக வங்கிகள், உங்களுக்கு ஏதேனும் கட்டணங்களை விதித்தால், நீங்கள் ஆர்பிஐ இணையதளத்தில் புகார் அளிக்கலாம். அதே போல இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாட்டில் இல்லாத உதவித்தொகை பெறும் கணக்குகள் மற்றும் ஜன் தன் யோஜனா கணக்குகள் ஆகியவற்றிற்கும் இது பொருந்தும். பெரும்பாலும் அனைத்து வங்கிகளும் நான் ஜீரோ அக்கவுண்டுகளை தான் பரிந்துரை செய்கின்றன. சில ஸ்கீம்களுக்கு விண்ணப்பித்திருக்கும் பட்சத்தில் மட்டும்தான் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் அனுமதிக்கப்படுகிறது.
இதுபோன்ற நான் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டுகளிலும் மினிமம் பேலன்ஸ் இல்லாத காரணத்தினால் எந்த ஒரு கட்டணத்தையும் விதிக்கக்கூடாது என்று ஆர்பிஐ கூறியுள்ளது.
வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் செயல்பாட்டில் இல்லாத தங்களது வங்கி கணக்கை மூடும் நோக்கத்தில் வங்கியை அணுகும்போது தான், அவர்களின் மைனஸ் தொகையை பற்றிய விவரங்கள் அவர்களுக்கு தெரியவருகிறது. எனவே வங்கிகளும் அபராத தொகையை செலுத்தினால் மட்டுமே கணக்கை க்ளோஸ் செய்ய முடியும் என்று அறிவிக்கின்றனர். ஆனால் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் தங்களது அக்கவுண்ட்டில் இருக்கும் மைனஸ் தொகைக்கு எந்த வித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்கிறது இந்திய ரிசர்வ் வங்கி.
இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி ஒருவர் நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத தனது வங்கி கணக்கை மூட வேண்டும் என்று நினைத்தால் எந்தவொரு அபராதத் தொகையையும் செலுத்தாமலேயே அந்த பேங்க் அக்கவுண்ட்டை மூடிக்கொள்ளலாம்.
இந்த செயல்முறைக்கு எந்த ஒரு வங்கியும் கட்டணங்கள் ஏதும் வசூலிக்கக்கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால் இன்னும் சில வங்கிகள் இதனை பின்பற்றாமல் உள்ளன. பொதுமக்களும் இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு பற்றிய புரிதல் இல்லாமல் வங்கிகள் கேட்கும் தொகையினை செலுத்திய பின்னரே தங்கள் வங்கி கணக்கை மூடுகின்றனர்.
இத்தகைய சூழலில் பொதுமக்கள் தங்களின் நீண்ட காலமாக செயல்பாட்டில் இல்லாத வங்கி கணக்கை க்ளோஸ் செய்யும் போது கவனமாக இருக்கவே இந்த பதிவு.
மேலே சொன்னதுபோல சில வங்கிகள் அபராதத் தொகையை செலுத்த வலியுறுத்தினால் நீங்கள் இந்திய ரிசர்வ் வங்கியிடம் புகார் செய்யலாம். அவ்வாறு புகார் அளிக்க விரும்பினால் bankingombudsman.rbi.org.in என்ற இணையத்தள முகவரிக்கு சென்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, உங்களது புகாரைப் பதிவு செய்ய வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் இந்திய ரிசர்வ் வங்கியின் உதவி எண் மூலமாக வேண்டுமானாலும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
அதையும் மீறி வங்கிகள் அபராதம் விதிக்கும் பட்சத்தில் அந்த வங்கியின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லாத நிலையில் அபராதம் விதிக்க கூடாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த போதிலும் சில வங்கிகள் இன்றளவும் அபராத தொகையை வசூலித்து வருகின்றன
Dr. A R. VijayShankar/editor

More Stories
Еженедельные акции в казино Pinco: как не упустить шанс?
Скачать Мостбет Приложение Для Android И Ios
mostbet এর কাজ কি: সদস্য হওয়ার প্রয়োজন কি?