
திருவண்ணாமலை தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “வேலை வாய்ப்பு முகாம்” இம்மாதம் எதிர்வரும் 19.07.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட பணிக்காலி யிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
எட்டாம் வகுப்பு 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு: பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு, பொறி யியல், ஐ.டி.ஐ. பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாம் அன்று தங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம். ரேஷன் அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்துகொள்ள வேண்டும்.
முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in முகவரியிலும் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 04175233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
சரவணன்
செய்தியாளர் போர்முனை
திருவண்ணாமலை


More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line