
வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் 20 காசு முதல் அதிகபட்சம் 55 காசுகள் வரை உயர்த்தப்படுகிறது.
0 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60 காசுகளாக இருந்த கட்டணம், ரூ.0.20 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.80 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
401 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.6.15 காசுங்களாக இருந்த மின்சாரக் கட்டணம், ரூ.0.30 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 6.45 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
501 யூனிட் முதல் 600 யூனிட் வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15 காசுகளாக இருந்த மின்சாரக் கட்டணம், ரூ.0.40 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.8.55 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

601 யூனிட் முதல் 800 யூனிட் வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.9.20 காசுகளாக இருந்த மின்சாரக் கட்டணம், ரூ.0.40 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.9.65 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
801 யூனிட் முதல் 1000 யூனிட் வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.10.20 காசுகளாக இருந்த மின்சாரக் கட்டணம், ரூ.0.50 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.10.70 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1000 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படும் மின்சாரம், ஒரு யூனிட் ரூ.11.25 காசுகளாக இருந்த மின்சாரக்கட்டணம், ரூ.0.55 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.11.80 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்சார பயன்பாடு குறித்த கணக்கீடு மேற்கொள்ளப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
வழிபாட்டுத் தலங்களுக்கு மின் கட்டண உயர்வு எவ்வளவு?
இதேபோல், வழிபாட்டுத் தலங்கள், தொழில் துறையினருக்கான மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வழிபாட்டு தலங்களுக்கான 0 முதல் 120 யூனிட்டுகளுக்கு ரூ.5.90 காசுகளாக இருந்த மின்கட்டணம், ரூ.0.30 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.6.20 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காட்டேஜ் மற்றும் மைக்ரோ இண்டஸ்ட்ரீஸ்-க்கு , 0 முதல் 500 யூனிட்களுக்கு, ரூ.4.60 காசுகளாக இருந்த மின்கட்டணம் ரூ.0.20 காசுகள் அதிகரித்து, ரூ.4.80 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தப்படும் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.65 காசுகளாக இருந்த மின்கட்டணம் ரூ.0.30 காசுகள் அதிகரித்து, ரூ.6.95 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வின் தாக்கம்
வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டண உயர்வின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்தும் தமிழ்நாடு மின்சார வாரியம் மதிப்பீடு ஒன்றை அளித்துள்ளது. அதன்படி,
100 யூனிட் வரையே மின்சாரம் பயன்படுத்துவோருக்கு கட்டணம் கிடையாது அவர்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது. இந்த வகையில் சுமார் ஒரு கோடி மின் நுகர்வோர் இருக்கிறார்கள்.
200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் சுமார் 63 லட்சம் பேர் கூடுதலாக மாதம் 5 ரூபாய் வீதம் மின்சார கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
300 யூனிட் வரை பயன்படுத்தும் சுமார் 35 லட்சம் நுகர்வோருக்கு மாதம் 15 ரூபாய் வீதம் மின்சார கட்டணம் உயரும்.
400 யூனிட் வரை பயன்படுத்தும் சுமார் 25 லட்சம் நுகர்வோருக்கு மா தம் 25 ரூபாய் வீதம் மின் கட்டணம் அதிகமாக இருக்கும்.
500 யூனிட் வரை பயன்படுத்தும் சுமார் 13 லட்சம் நுகர்வோருக்கு மாதத்திற்கு 40 ரூபாய் மின்சார கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
சரவணன்
செய்தியாளர் போர்முனை
திருவண்ணாமலை


More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line