
திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையினரால் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 64 பலதரப்பட்ட வாகனங்கள் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டப் பிரிவு 14(4) ன் படி அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த வாகனங்கள் தமிழ்நாடு அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி வரும் 25.07.2024 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது.
பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தற்போது நடைமுறையில் உள்ள நோய் தடுப்பு பாதுகாப்பு மற்றும் அரசின் வழிகாட்டுதல்களின் படி முன்னெச்சரிக்கை நடைமுறைகளை பின்பற்றியும், கட்டாயமாக முககவசம் அணிந்து வந்து நுழைவு கட்டணமாக ரூ.100/- செலுத்தி ரசீது பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

20.07.2024 முதல் 24.07.2024- ம் தேதிவரை காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை ஏலத்தில் கலந்து கொள்ள ரசீது வழங்கப்படும். மேலும், ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையையும், ஏலத்தொகையுடன் 18% (GST) சரக்கு மற்றும் சேவை வரியும் சேர்த்து உடனே செலுத்த வேண்டும். இதற்கு உண்டான இரசீது வழங்கப்படும் மற்றும் பதிவு எண், எஞ்சின் எண், சேசிஸ் எண், இல்லாத வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மறுபதிவு செய்ய இயலாது. ஏலம் எடுத்த வாகனத்திற்கு உண்டான இரசீதே அவ்வாகனத்தின் உரிமை ஆவணமாகும்.
மேலும் விவரங்களுக்கு துணை காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, திருவண்ணாமலை மாவட்டம் அவர்களது அலுவலகத்தில் நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் அலுவலக தொலைபேசி எண் 04175 233920.
சரவணன்
செய்தியாளர் போர்முனை
திருவண்ணாமலை


More Stories
Еженедельные акции в казино Pinco: как не упустить шанс?
Скачать Мостбет Приложение Для Android И Ios
mostbet এর কাজ কি: সদস্য হওয়ার প্রয়োজন কি?