March 16, 2026

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பாக அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது

..

இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026க்கான அறிக்கை வெளியிடப்பட்டதை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பாக அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (15.03.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்    நடைபெற்றது..

இக்கூட்டத்தில்  மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தெரிவித்தாவது.

இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளதால் வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 தமிழ்நாட்டில்  வருகின்ற 23.04.2026 அன்று ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வேலூர்  மாவட்டத்தில்   தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாக 15.03.2026 இன்று முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 குறித்த தேர்தல் அறிவிப்பினை கீழ்க்கண்டவாறு அறிவித்துள்ளது. 

அறிவிப்பாணை  வெளியிடும்  நாள்30.03.2026
வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்30.03.2026
வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள்06.04.2026
வேட்பு மனுக்கள் பரிசீலனை07.04.2026
மனுக்கள் திரும்பப்பெறுதல்09.04.2026
வாக்குப் பதிவு நாள்23.04.2026
வாக்கு எண்ணிக்கை நாள்04.05.2026

மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் மேற்படி பறக்கும் படை மற்றும் குழுக்களை கண்காணிப்பதற்காக தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை கட்டுப்பாட்டு அறையில் 1800-425-7004  என்ற  கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 7598498539 என்ற வாட்ஸ்ஆப்  தொலைபேசி எண்ணிலும், C-vigil செயலியின் மூலமாகவும் தெரிவிக்கலாம். 

வேலூர் மாவட்டத்தில்  அரசு கட்டடங்கள் மற்றும் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், ஓவியங்கள் மற்றும் கொடிகள் அனைத்தும் 24 மணிநேரத்திற்குள் அழிக்கப்படும்.

பொதுத்துறை கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், ஓவியங்கள் மற்றும் கொடிகள் 48 மணிநேரத்திற்குள் அழிக்கப்படும். 

தனியார் கட்டடங்கள் மற்றும் சுவர்களில் உள்ள சுவரொட்டிகள் மற்றும் ஓவியங்களை 72 மணிநேரத்திற்குள் அழிக்கப்படும்.  இப்பணிகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பணியாளர்கள் உடனடியாக  ஈடுபட்டுள்ளனர். 

அரசு அலுவலகங்களில் உள்ள அனைத்து வாழும் அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட வேண்டும். பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளில் உள்ள அரசியல் கட்சிகளின் பெயர்கள், சின்னங்கள் மற்றும் கொடிகள் மறைக்கப்பட வேண்டும்.

அரசு கட்டடங்களில் இடம்பெற்றுள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின்  விளம்பர பலகைகள் மறைக்க பட வேண்டும். சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வாரியத்தலைவர்களின்  அலுவலகங்கள் பூட்டி வைக்கப்பட வேண்டும். அதேபோன்று  மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு வாகனங்கள் திரும்ப பெற வேண்டும்.

அரசின் புதிய நலத்திட்டங்களை தொடங்குதல் மற்றும் புதிய பயனாளிகளை  தேர்வு செய்தல் ஆகியவற்றை மேற்கொள்ளகூடாது. மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் மற்றும் இதர மனுக்கள் பெறும் நிகழ்வுகள் தேர்தல் நடத்தை  விதிகள் முடியும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

அரசினர் விருந்தினர் மாளிகைகளில் எந்தவொரு அரசியல் கட்சியினரையும் அனுமதிக்கக்கூடாது. மாவட்ட தேர்தல் அலுவலரின் அனுமதி பெற்றே விருந்தினர்களை தங்க வைக்க அனுமதிக்க வேண்டும்.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்களுக்கு வரும் புகார்களின்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அலுவலர்களின் பெயர்,தொலைபேசி எண், சட்டமன்ற தொகுதி கட்டுப்பாட்டு அறை எண்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்கள்

வ. எண்.சட்டமன்ற தொகுதிதேர்தல் நடத்தும் அலுவலர் பெயர் மற்றும் பதவிவேட்புமனு பெறும் இடம்கட்டுப்பாட்டு அறை  தொலைபேசி எண்.
140-காட்பாடிதிரு.சி.மாறன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), வேலூர் மாவட்டம். கைப்பேசி எண்-8838002055.வட்டாட்சியர் அலுவலகம், காட்பாடி.7598498540
243-வேலூர்திரு.ஏ.செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர், வேலூர் கோட்டம். கைப்பேசி எண்.-9445000417வட்டாட்சியர் அலுவலகம், வேலூர்.7598498541
344.அணைக்கட்டுதிரு.ஆர்.குணசேகரன், உதவி ஆணையர் (கலால்), கைப்பேசி எண்.9245144724வட்டாட்சியர் அலுவலகம், அணைக்கட்டு.7598498542
445.கீ.வ.குப்பம் (தனி)திரு.எஸ்.சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர், கைப்பேசி எண்.9445000184வட்டாட்சியர் அலுவலகம், கீ.வ.குப்பம்.7598498543
546-குடியாத்தம் (தனி)செல்வி எஸ்,சுபலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர், குடியாத்தம். கைப்பேசி-9442999120வட்டாட்சியர் அலுவலகம், குடியாத்தம்.7598498544

                அனைத்து துறை அலுவலர்களும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை அமல் படுத்துவதில் முழு கவனத்துடனும், நடுநிலையோடும் செயல்பட வேண்டுமென  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

                இக்கூட்டத்தில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ந.உ.சிவராமன், இ.கா.ப.,  கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மா.சிவசுப்பிரமணியன்,  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பூ.காஞ்சனா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.அண்ணாதுரை, உதவி காவல் கண்காணிப்பாளர் திருதனுஷ்குமார், இ.கா.ப., வேலூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.இரா.லெட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு.பாஸ்கரன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் வட்டாட்சியர் திரு.ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்