கன்னியாகுமரி மாவட்டம்.
மே 24,
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.சுந்தரவதனம் IPS அவர்கள் தலைமையில் இன்று (24.05.2024) ம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து குற்றங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது பற்றி தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், நாகர்கோவில் மற்றும் குளச்சல் உட்கோட்ட உதவி கண்காணிப்பாளர்கள், தக்கலை மற்றும் கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து தனிப்படை அதிகாரிகள், தனிப்பிரிவு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் போர்முனை நிருபர்: M.சுரேஷ்
More Stories
ஜவ்வாது மலையில் அரசு மானியங்கள் குறித்த விளக்கவுரை
ஜமுனாமுத்தூர் சாலையில் ஒற்றைக் காட்டு யானை
கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வ தேச சதுரங்க தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைப்பெற்றது.