
நெய்வேலி. ஜீன். 10. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு மற்றும் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ கண் சிகிச்சை மற்றும் இரத்த தான முகாம் நெய்வேலி தொ.மு.ச. கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ. கணேசன் கலைஞரின் திருஉருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இலவச மருத்துவ கண் சிகிச்சை முகாம் மற்றும் இரத்த தான முகாமை துவக்கி வைத்தார். அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் குமார், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் தலைமையில் கண் பரிசோதனை, சக்கரை நோய் கண்டறிதல் மற்றும் ரத்த தானம் ஆகியவை நடைபெற்றது. முன்னதாக நெய்வேலி நகர பொறுப்பாளர் குருநாதன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் இராசவன்னியன், மாவட்ட பொருளாளர் தண்டபாணி, தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி, தலைமைப் பொதுக்குழு உறுப்பினர், பாரி, நகர தலைவர் நன்மாற பாண்டியன், தொமுச பேரவை மாநில து. செயலாளர் இராமச்சந்திரன், நகர பொருளாளர் மதியழகன், மாவட்ட பிரதிநிதிகள் நாசர், இரவிச்சந்திரன், இளங்கோ, நகர துணை செயலாளர்கள் கோமதி செந்தில்குமார், செந்தமிழ்ச்செல்வன், இராம. கருப்பன், மா.கவுன்சில் செயலாளர் பொன்முடி மற்றும் நெய்வேலி நகர நிர்வாகிகள், மாவட்ட, நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் ஏராளமானோர்
கலந்து கொண்டனர்.

ஆ.இர. விஜயய்ஷங்கர்/ஆசிரியர்
More Stories
Pinco Mobil Casino Uygulaması: Eğlence Ve Kazanç Bir Arada
Pinco Mobil Casino Uygulaması: Eğlence Ve Kazanç Bir Arada
Mostbet, Mostbet Giriş, Mostbet Güncel Giriş Adresi