
திருப்பூர், ஜூலை.11-
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாணவர் அணி அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை சார்பில், மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர் ஏற்பாட்டில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளித்தனர்.
கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. புதிய கல்வியாண்டை தொடங்கும் உற்சாகத்துடன் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருகை புரிந்தனர். அதன்படி திருப்பூர் மாவட்டம்-மங்கலம் பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவர் அணி அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை சார்பில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர் -அவர்களின் ஏற்பாட்டில் மங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முஸ்லிம் மாணவர் பேரவை மாநில துணைத்தலைவர் முகமதுமுபீஸ், முஸ்லீம் மாணவர் பேரவை திருப்பூர் மாவட்ட துணைச்செயலாளர் யாசர்அரபாத், மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் முகமதுரபி, முன்னாள் மாணவர் பேரவை நிர்வாகிகள் எபிசியண்ட்மணி, முஜிபுர் ரஹ்மான், சதாம்உசேன் , பள்ளி ஆசிரியர்கள்,மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், மாணவ,மாணவிகளிடம் பேசுகையில்
“கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிக்கு வந்துள்ள மாணவ, மாணவிகள் அனைவருக்கும் இந்த கல்வியாண்டு இனிதாக அமைய வாழ்த்துகிறேன்”-இவ்வாறு அவர் பேசினார்.
ஆ.இர. விஜயய்ஷங்கர்/ஆசிரியர்

More Stories
Еженедельные акции в казино Pinco: как не упустить шанс?
Скачать Мостбет Приложение Для Android И Ios
mostbet এর কাজ কি: সদস্য হওয়ার প্রয়োজন কি?