
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் ஆவணியாபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய
தொடக்கப் பள்ளியில் இன்று 10/06/2024 கோடை விடுமுறையை முடித்து புதிதாக சேர்ந்த பள்ளி குழந்தைகளை கௌரவிக்கும் விதமாக அவர்களை மேளதாளத்துடன் மாலை அணிவித்து பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் .. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக வட்டார கல்வி அலுவலர், வட்டார ஆசிரியர் பயிற்றுநர், கிராம நிர்வாக அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஆவணியாபுரம் கிராம ஊராட்சி மன்றத் தலைவர்,துணைத் தலைவர் ஊராட்சி செயலர் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் பங்கு பெற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியை ஆவணியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சேவா ரத்னா மதிப்புறு முனைவர். சரவணன் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
ஆ.இர. விஜயய்ஷங்கர்/ஆசிரியர்

More Stories
Steps to build a powerful profile on Filipino dating apps
Indonesian dating apps vs Indonesian dating sites: which performs better?
Exploring Legit Sugar Daddy Apps That Send Money