திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி 10.06.2024 இன்று திறக்கப்பட்டது

பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர் பள்ளியின் தலைமை ஆசிரியர் மனோன்மணி அவர்கள் தலைமையில் ஆசிரியர்கள் இணைந்து பள்ளியின் மாணவ மாணவிகளை அன்போடு வரவேற்றனர்
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு பள்ளியில் புதிய மாணவர்களாக சேர்ந்துள்ள மாணவ மாணவிகளை வாழ்த்தி வரவேற்று சிறப்புரையாற்றினார்.
சுற்றுச்சூழல் உறுதிமொழியினை முனைவர் தா சு பாலாஜி தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் அவர்கள் வாசிக்க பள்ளியின் மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்
இதனைத் தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலை இல்லா பாட புத்தகங்கள் வழங்கினார்
நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சரவணன்/செய்தியாளர் போர்முனை

More Stories
Какова политика конфиденциальности и безопасность игры в Pinco?
Олимп Казино Казахстан Официальный Сайт Olimp Casino Kz
Пользовательский опыт на онлайн-платформе Mostbet: навигация по Betting-платформе