November 17, 2024

பாடகம் அரசு உயர் நிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா

திருவண்ணாமலை இளைஞர் திறன் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் ஐம்பெரும் விழா அரசு உயர்நிலைப்பள்ளி, பாடகம் கிராமத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைத்து மாணவர்களுக்கும், கொய்யா,எலுமிச்சை, நெல்லி, சீத்தா பழம் போன்ற பல்வேறு பழ வகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் உடன் திருவண்ணாமலை இளைஞர் திரு மேம்பாட்டு சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் இணைந்து 50 நிழல் தரும் மரக்கன்றுகள் நட்டனர். முதல் நாள் பள்ளி திறப்பு விழாவை ஒட்டி பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இனிப்பு (லட்டு) வழங்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு விளையாட்டு உபகரணங்கள் தலைமை ஆசிரியரிடம் வழங்கப்பட்டது. கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பி அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுதல் தெரிவித்ததோடு கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பாடகம் அரசு உயர்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி பெற உழைத்த பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் திரு நா சரவணன் அவர்கள் முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை இளைஞர் திறன் மேம்பாட்டு சங்கத்தின் இணை செயலாளர் திரு பரசுராமன் அவர்கள் தலைமை வகித்தார். இந்த நிகழ்வில் திருவண்ணாமலை இளைஞர் திறன் மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் திரு வெங்கடேசன், செயலாளர் திரு மகா விஷ்ணு, பொருளாளர் திரு புருஷோத்தமன், இணை செயலாளர் திரு முருகன், துணைத்தலைவர் திரு ராஜா, மற்றும் திரு பரணி, சங்க உறுப்பினர் திரு குப்பன் , TYSDS நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர் டாக்டர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டு அனைவருக்கும் மரக்கன்றுகள் மற்றும் இனிப்பு வழங்கி ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.இந்த விழாவில் கலந்து கொண்ட பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளி ஆசிரியர்களையும் பள்ளிக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்த திருவண்ணாமலை இளைஞர் திறன் மேம்பாட்டு சங்க இளைஞர்களை பாராட்டினர்.

சரவணன்/ செய்தியாளர்