பண்ருட்டி. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு
பண்ருட்டி காவல் துணை கண்காணிப்பாளர் பழனி அவர்கள் தனது மகனுடன் வருகை தந்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜுயிடம் தனது மகனை பள்ளியில் சேர்க்கை வழங்குமாறு விண்ணப்பம் அளித்தார்.
இதையடுத்து தலைமை ஆசிரியர் டிஎஸ்பி மகனை மேல்நிலை வகுப்பில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டார். இது குறித்து டிஎஸ்பி கூறுகையில். அரசு பள்ளிகள் தற்போது மிளிரும் பள்ளிகளாக சிறப்புமிக்க பள்ளிகளாக உருவாகி வருகின்றன. எனவே என் குழந்தையை அரசு பள்ளியில் சேர்த்துள்ளேன் என்றார். உடன் பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜு, தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் ராஜா ஆ,பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் லோகநாதன், ஆசிரியர்கள் லட்சுமி காந்தன், பாரதி, ராஜராஜேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆ.இர. விஜய்ஷங்கர்/ஆசிரியர்
More Stories
ஜவ்வாது மலையில் அரசு மானியங்கள் குறித்த விளக்கவுரை
ஜமுனாமுத்தூர் சாலையில் ஒற்றைக் காட்டு யானை
கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வ தேச சதுரங்க தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைப்பெற்றது.