
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் புராண கதைகள், சிறப்பம்சங்கள், விழாக்கள்
படையெடுத்து செல்லும் படை வீரர்கள் தங்கும் இடம் தான் படைவீடு. அதன் படி சூரபத்மன் வதம் செய்வதற்காக தளபதி வீரபாகு உள்ளிட்ட படைவீரர்கள் தங்கியிருந்த இடம் தான் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்.
சூரபத்மன் என்ற அரக்கனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று தன் வைரவேல் கொண்டு வதை செய்த தினம் கந்த சஷ்டி விழா, “சூர சம்ஹாரம்” என விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
பெயர் காரணம்
சூரபத்மனை வெற்றிகொண்டதால் இங்கே கோயில் கொண்ட முருகப்பெருமான் ‘ஜெயந்திநாதர்’ என்று விளிக்கப்பட்டதாகவும் அதுவே பின்னாளில் மருவி ‘செந்தில்நாதர்’ என்று மருவியதாம். அதுபோலவே இவ்வூரும் ‘திருசெயந்திபுரம்’ என்பதிலிருந்து திருச்செந்தூர் என்றானதாகச் சொல்லப்படுகிறது.
சிலப்பதிகார குறிப்புகள் படி இக்கோயில் 2000 ஆண்டுகள் பழமையானதாகச் சொல்லப்படுகிறது. இவ்விடம் முன்னர் ‘திருச்சீரலைவாய்’ என்று அழைக்கப்பட்டதாம்.

கோயில் அமைப்பு: முன்னுரையில் சொன்னது போலவே அறுபடை வீடுகளில் மலைமீது அமைந்திராத கோயில் இது மட்டுமே. திருச்செந்தூர் கோயிலின் ராஜகோபுரம் ஒன்பது அடுக்குகளைக் கொண்டு 150 அடி உயரமுடையதாகும்.
கோயில் அமைப்பு:முருகனின் இடது கையில் தாமரை மலர் மற்றும் ஜடாமுடியோடு சிவயோகி போல் காட்சியளிக்கிறார். முருகனின் பின் புறம் இடது சுவரில் முருகன் பூஜை செய்ததாக கூறப்படும் லிங்கம் ஒன்று உள்ளது. அதற்கு முதலில் பூஜை செய்த பின் முருகப்பெருமானுக்கு பூஜை செய்யப்படுகிறது.
இரு முருகன் :
சூரனை வதைத்த முருகன் நான்கு கைகளுடன் சிவபூஜை செய்து ஜடாமுடியுடன் தவக்கோலத்தில் இருக்கின்றார். அவரின் தவத்தை கலைத்துவிடக்கூடாது என்பதற்காக அவருக்கென்று தனி பிரகாரம் கிடையாது. மூலவர் தெற்கு நோக்கி இருக்கிறார்.
மஞ்சள் நீராட்டு:
கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில், தங்கள் ஊர் பெண் தெய்வானையை திருமணம் செய்ததற்காகவும், போர் முடிந்து முருகனின் உக்கிரத்தை குறைக்கும் விதமாகவும் முருகன் மீது பக்தர்கள் மஞ்சள் நீரூற்றி விளையாடுகின்றனர்.
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கு மற்றொரு காரணமும் உண்டு. சில முனிவர்கள் உலக நலனை காக்க ஒரு புத்திரன் வேண்டும் என கருதி, ஐப்பசி மாத அமாவசையன்று தொடங்கி, 6 நாட்கள் யாகம் நடத்தி இருக்கின்றனர்.
கோயில் திறந்திருக்கும் நேரம்
கோயில் காலை 5 மணிக்கு முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். திருச்செந்தூர் முருகன் கோயிலில் 9 கால பூஜை நடைபெறுகிறது.
கங்கை பூசை:
தினமும் மதிய உச்சிகால பூஜை முடிந்த பின் ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள தாளத்துடன் சென்று கடலில் கரைக்கப்படுகிறது. இதற்கு கங்கை பூஜை எனப்படுகிறது.
புத்தாடை : தீபாவளிக்கு மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து கொண்டாடுவது வழக்கம். அதே போல இந்திரன் மகளான தெய்வானையை முருகன் மணமுடித்திருப்பதால், இந்திரன் புத்தாடை எடுத்துத்தருவதாக நம்பப்படுகிறது.

திருவிழாக்கள்
வைகாசி விசாகம்
ஆவணித் திருவிழா
கந்த சஷ்டி விழா (7 நாட்கள்) – சூரசம்ஹாரம்
மாசி திருவிழா (12 நாட்கள்)
குழந்தை வரம் அருளும் முருகன்
வைகாசி விசாகத்தின் போது கடுமையாக நோன்பு வைத்து காவடி, பால்குடம், அபிஷேகம் போன்றவற்றை இறைவனுக்கு படைக்கின்றனர். தங்க தேர் ஊர்வலம், சந்தனா காப்பு, அபிஷேகங்கள் செய்து வருகின்றனர்.
பக்தியுடன் முருகப்பெருமானை அபிஷேகம் செய்து வணங்குவதன் மூலம் தங்கள் மனக் கவலைகளிலிருந்து விடுபட முடியும் என நம்புகின்றனர்;
கந்த சஷ்டி விரதம் இருப்பதால் திருமணமாகாதவர்கள் திருமண பாக்கியமும் மற்றும் குழந்தை இல்லாதவர்கள் அருள்மிகு சுப்பிரமணியா சுவாமியின் கிருபையால் குழந்தை பேறும் கிடைப்பதாக நம்புகின்றனர்.
நாழிக் கிணறு
நாழிக் கிணற்றுக்கும் சூரசம்ஹாரத்துக்கும் கூட ஒரு தொடர்பு இருக்கிறது. சூரசம்ஹாரம் முடிந்த பிறகு முருகன் தனது கோபத்தைத் தணிக்க தனது வேலால் வேகமாக தரையை குத்த, பீரிட்டு வந்த நீர்தான் நாழிக் கிணற்றில் இருப்பதாக நம்பிக்கை.
சூரபதுமனுடனான போரின் போது திருச்செந்தூரில் முகாமிட்டு தங்கியிருந்த போர் வீரர்கள் தாகத்தை தீர்ப்பதற்காக முருகன் தனது வேலால் இந்த கிணறை உருவாக்கினர் என்றும் கூறப்படுகிறது.
கடல் பரப்பை விட கீழ் இருக்கும் இந்த நாழிக் கிணற்றில் ஊறும் நீர் கடல் மண்ணிணால் வடிகட்டப்பட்டு உவர்ப்பு நீங்கி இனிப்பு சுவையுடன் உருவெடுக்கிறது.
திருச்செந்தூரில் தங்கும் வசதி
திருச்செந்தூர் முருகன் கோவில் முன்பதிவு எனும் இணையதளத்துக்கு சென்று, ரூம் புக்கிங் எளிதாக செய்யமுடியும். இந்த இணையதளம் திறக்கப்பட்டவுடன், புக் ரூம்ஸ், அறை வாடகை தகவல்கள், ரசீது பதிவிறக்கம், ஈ சேவை புகார் என பல வசதிகளும் இங்கு இருக்கின்றன. நீங்கள் அவற்றின் மூலம், உங்கள் வசதிக் கேற்ப அறைகள் முன்பதிவு செய்யலாம் மற்றும் உங்கள் புகார்களை நிர்வாகத்திடம் தெரிவிக்கமுடியும்.

Dr. ஆ.இர. விஜய ஷங்கர்
ஆசிரியர் – போர்முனை
More Stories
Pinco Mobil Casino Uygulaması: Eğlence Ve Kazanç Bir Arada
Pinco Mobil Casino Uygulaması: Eğlence Ve Kazanç Bir Arada
Mostbet, Mostbet Giriş, Mostbet Güncel Giriş Adresi