November 18, 2024

ஆசியாவிலேயே மிகஉயரமான நெய்வேலி நடராஜர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

நெய்வேலி. ஜீன்.17. கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அனல் நிலையங்களில் பணியாற்றிய சிவ பக்தர்கள் ஒன்று கூடி 1980 ஆம் ஆண்டு பன்னிருதிருமுறை வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினார்கள். இக்கழகம் சிவவழிபாட்டையும், திருமுறை இசை நிகழ்ச்சிகள்,

திருமுறை பயிற்சிகள், தல யாத்திரைகள், உழவாரப் பணியில் ஈடுபட்டு வந்தனர். பல ஊர்களில் உள்ள கோயிலுக்கு சென்று வந்த பன்னிரு திருமுறைகழக அன்பர்கள் நெய்வேலியில் தங்கள் ஊரில் சிறப்பான சிவன் கோயில் கட்ட வேண்டும் என்று தீர்மானித்து 1986 ஆம் ஆண்டு மாட கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.

இரவு பகல் என்று பாராமல் கடினமாக உழைத்த சிவ பக்தர்களின் முயற்சியால் ஒரே ஆண்டில் கோயில் கட்டி முடிக்கப்பட்டு 1987 ஆம் ஆண்டு முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயிலுக்கு சிவபுரம் என்று பெயரும் சூட்டப்பட்டது. பலவகையான மூலிகைகளைக் கொண்டு ஓதுவா மூர்த்திகளின் தேவாரப் பாடல்களுடன் மயிலை குருஜி சுந்தர்ராம் சுவாமிகள் மேற்பார்வையில் திருச்சிற்றம்பலமுடையாரின்
ஐம்பொன் செப்பு திருமேனி வளர்க்கப்பட்டது. உலகிலேயே ஓரே வார்ப்பில் ஐம்பொன்னாலான நடராஜர் சிலை இதுவாகும். இந்த நடராஜர் சிலையில் உயரம் 10 அடி ஒரு அங்குலம், அகலம் 8 அடி நான்கு அங்குலம், எடை 2,420 கிலோ ஆகும். இதுவே நெய்வேலி நடராஜர் கோவிலில் உள்ள உலகில் உயரமான நடராஜர் சிலை ஆகும்.
சிற்றம்பலயானுக்கு அருதுணையாக ஐம்புலனான அன்னையின் சிலையும் காணப்படுகிறது. அழகிய திருச்சிற்றம்பல முடையான் அறம் வளர்த்த நாயகி உடனாகிய செம்பொற்சோதிநாதர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் நால்வர் பெருமக்கள் திருமூலர் சேக்கிழார் விநாயகர் அறுபத்து மூவர் உற்சவமூர்த்திகள் பன்னிரு திருமுறை அஷ்ட பூஜ துர்கா தேவி ஆகிய அனைத்து சுவாமிகளுக்கும் தசமி திதிஹஸ்த நட்சத்திரம் அமிர்த யோகம் கூடிய சுபதினத்தில் காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் மிதுன லக்னத்தில் கோ பூஜை, கஜ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து திருக்கயிலாய பரம்பரை வாமதேவ சூரியனார் கோயில் ஆதீனம் மகாலிங்க பண்டார சன்னதி, என். எல். சி. தலைவர் பிரசன்னகுமார், பன்னிரு திருமுறை வளர்ச்சி கழக
புரவலரும், ஓய்வு பெற்ற தமிழ்நாடு காவல் துறை தலைவர் பஞ்சாபகேசன் முன்னிலையில் தில்லைவாழ் அந்தணர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை இருந்து கடம் புறப்படாகி விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பன்னிரு திருமுறைகழக தலைவர் வெங்கடாசலம்,
செயலாளர் இரணியன், பொருளாளர் பரம.சேகர் செய்திருந்தனர்.
சிவாச்சாரியார்கள், அன்பர்கள்,பொதுமக்கள்
ஏராளமான கலந்து கொண்டனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் கலச பிரச்சாதங்கள் வழங்கப்பட்டது. நெய்வேலி நகர காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.