பண்ருட்டி ரத்தினம் பிள்ளை காய்கனி மார்க்கெட் 14 கோடியில் புதுப்பிக்கப்படும்
நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் தகவல்

கடலூர் மாவட்டம்
பண்ருட்டி நகராட்சிக்குட்பட்ட ரத்தினம் பிள்ளை காய்கறி மார்க்கெட்டை பண்ருட்டி நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். ரத்தினம் பிள்ளை மார்கெட் பகுதி பொதுமக்கள் பயன்படுத்துவதற்கும் சிரமமாகவும் , கட்டிடங்கள் இடிந்து நிலையில் இருப்பதை பார்வையிட அவர் சுமார் 14 கோடி காய்கனி மார்கெட், மீன் மீன் மார்கெட், கறி மார்கெட் போன்றவற்றை புதுப்பித்து கட்டப்பட்ட உள்ளன. மார்கெட்டிக்கு பொதுமக்கள் வந்து செல்ல ஏதுவாகவும், வாகனங்களில் காய்கறிகள் ஏற்றி இருக்க அகலமான சாலை வசதி, கழிப்பறை வசதிகள், பாதுகாப்பான குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும். விரைவில் காய்கனி மார்கெட் வியாபாரிகளிடம் கருத்து கணிப்பு கூட்டம் நடத்தி பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
ஆய்வின் போது நகர மன்ற துணைத் தலைவர் சிவா, நகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயன், நகர மன்ற உறுப்பினர்கள் சோழன் , பழனி, கிருஷ்ணராஜ், திமுக நகர அவைத்தலைவர் ராஜா உடன் இருந்தனர்.
முருகானந்தம்
செய்தியாளர் மக்கள் குத்து
கடலூர்

More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line