November 21, 2024

கயப்பாக்கம் ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயத்தில் பால்குடம் ஊர்வலம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அடையபலம் ஊராட்சிக்குட்பட்ட கயப்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கங்கையம்மன் ஆலயத்தில் 13ம் ஆண்டு 

கூழ்வார்கும் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சள் புடவை அணிந்து விரதமிருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து மதியம் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி அம்மனை வணங்கி வழிபட்டனர்.

இதனை தொடர்ந்து இரவு அம்மன் உற்சவர் சிலையை அலங்கரிக்கப்பட்டு புஷ்ப பல்லக்கில் அம்மன் திரு வீதியுலா வான வேடிக்கையுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் சுற்றியுள்ள பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.