
கடலூர் மாவட்டம் புவனகிரி கள்ளிக்காட்டு தெருவில் விஐபி பாய்ஸ் அணியினர் நடத்திய இரண்டாம் ஆண்டு மாபெரும் கைப்பந்து போட்டி திலிப் ஈழன் தலைமையில் நடைபெற்றது.
இந்த விளையாட்டுப் போட்டியை ஸ்ரீ அகத்தியம் பவுண்டேஷன் நிறுவனர் ஈஸ்வர் ராஜலிங்கம் துவக்கி வைத்தார். இதில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து அணியினர் பங்கேற்று விளையாடினர்
போட்டியில் முதல் பரிசு வென்ற தமிழ் அன்னை அணியினருக்கு பிரசாத் பட்டேல் மற்றும் வா.ஈழன் சிறப்பு பரிசையும் வென்ற யூத் பாய்ஸ் அணியினருக்கு டாக்டர்.கதிரவன் ஆகியோரும் , இரண்டாம் பரிசை வென்ற புவனகிரியை சேர்ந்த விஐபி பாய்ஸ் அணியினருக்கு கருப்பட்டி ராஜா ராஜ்குமார் மற்றும் கீரப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கீரன் ஆகியோரும் மூன்றாம் பரிசை வென்ற கருங்குழியைச் சேர்ந்த ஏகே ஃபிரண்ட்ஸ் அணியினருக்கு அருள்வேந்தன் மற்றும் புனித ராம்ராஜ், அருள்ஜோதி ஆகியோரும் , நான்காம் பரிசு வென்ற அரவிந்த் பிரண்ட்ஸ் அணியினருக்கு எம் எஸ் கனகு மற்றும் செந்தில்குமார் ஆகியோரும் ஐந்தாம் பரிசு வென்ற மருவாய் விமல் பிரண்ட்ஸ் அணியினருக்கு பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் லலிதாமணி முல்லைமாறன் மற்றும் வடக்குத்திட்டை ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் ஆகியோரும் ஆறாம் பரிசு வென்ற ராமநாதகுப்பம் சூறாவளி அணியினருக்கு பிரபாகரன் மற்றும் ஆகாஷ் ஆகியோரும் , ஏழாம் பரிசு வென்ற ஆடூர் ராஜேஷ் பிரண்ட்ஸ் அணியினருக்கு ராஜதுரை, தாமரைச்செல்வன் மற்றும் வீ.தியாகராஜன் ஆகியோரும் காசோலைகள் மற்றும் பரிசு கோப்பைகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியில் விஐபி பாய்ஸ் அணியினரின் சார்பாக தி.மாரி நன்றி கூறினார்,
குகன்
செய்தியாளர் மக்கள் குத்து
கடலூர்

More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line