கடலூர்.ஜீன்.19. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வாயிலாக 2024 ஆம் ஆண்டுக்கான அகழாய்வு பணிகள் கீழடி. வெம்பக்கோட்டை .திருமலாபுரம். பொற்பனைக்கோட்டை. கொங்கல்நகரம். சொன்னானுர் .கீழ்நமண்டி. கடலூர் மாவட்டம் மருங்கூர் உள்ளிட்ட எட்டு இடங்களில் அகழாய்வு பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
கடலூர் மாவட்டம் மருங்கூரில் முதலாம் கட்ட அகழாய்வு பணிகள் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் பணிகள் தொடங்கப்பட்டன.
சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை கொள்ளுகாரன்கோட்டை மேற்கே சுமார் 2 கிலோ மீட்டர் அமைந்துள்ள இப்பகுதி மேற்கண்ட கள ஆய்வின்போது வாழ்விடப் பகுதி உள்ள மேட்டின் ஒரு பகுதியில் வெளி சாம்பல் நிற ரௌலட்டட் பாளை ஓடுகள் கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள் நுண்கற்கால கருவிகள், பிறை வடிவ ஒலிகள் மற்றொரு பகுதியில் செங்கல் கட்டமைப்பு வெளிப்பட்டுள்ளதாகவும் இந்த பொருட்கள் இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டுக்கு முந்தைய யதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் குறியீடுகளைக் கொண்ட நான்கு பானை ஓடுகள் கள ஆய்வில் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் கிராமத்தின் தெற்கு பகுதியில் செங்கல் கட்டுமானம், வட்டச் சில்லுகள், பச்சை, ஊதா, மஞ்சள், கருப்பு வெள்ளை நிற மணிகள் போன்றவை கிடைக்க பெற்றுள்ளன. மேலும் கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், இரும்பு உலை, சுடுமண் ஊது குழாய், முதுமக்கள் தாழிகள், வட்ட வடிவிலான தாங்கிகள், மெரு கூட்டப்பட்ட கருப்பு நிற மூடிகள், சிதலமடைந்த சுடுமண் விளக்குகள் ஆகிய கருவிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. அகழாய்வுகளின் மூலம் கிடைக்க பெறும் தொல்பொருளின் வாயிலாக இப்பகுதி இரும்பு காலம் மற்றும் வரலாறுக்கு முந்தைய காலமாக கருதப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி ஓன்றிய குழு பெருந்தலைவர் சபா. பாலமுருகன், அகழாய்வு இயக்குனர் சிவானந்தம், அகழாய்வாளர்கள் பாக்கியலட்சுமி, சுபலட்சுமி, மருங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி துளசி, ஊராட்சி மன்ற துணை தலைவர் சசிகலா ஜெயசெழியன், ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் உதயகுமார், நில உரிமையாளர் கோகுல கிருஷ்ணன், தவாக ஒன்றிய செயலாளர் நவநீத ராமன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழ் செல்வன், கிருஷ்ண குமார், சிவகாம சுந்தரி சிவக்குமார், அகழாய்வு ஆய்வாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முருகானந்தம்
செய்தியாளர் மக்கள் குத்து
கடலூர்
More Stories
ஜவ்வாது மலையில் அரசு மானியங்கள் குறித்த விளக்கவுரை
ஜமுனாமுத்தூர் சாலையில் ஒற்றைக் காட்டு யானை
கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வ தேச சதுரங்க தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைப்பெற்றது.