January 15, 2026

பண்ருட்டியில் தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அன்னதானம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரே தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கெளதம், கோவிந்தராஜ் தலைமையில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். முன்னதாக ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள் அகமது இப்ராஹிம், வேல்முருகன், சரவணன், பிரகாஷ், அஜய், ஐய்யனார், பிரசாத், மணி, சாமுவேல், கோப்பெருஞ்சிங்கம், சதீஷ் மற்றும் மாவட்ட, நகர, ஓன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.