November 22, 2024

நத்தத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்திரையர் சதய விழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்தும் மரக்கன்றுகள் நட்டு வைத்தும் வழிபாடு.

நத்தம்,மே.23:

நத்தத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்திரையர் 1349-வது சதய விழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்தும் மரக்கன்றுகள் நட்டு வைத்து வியாழக்கிழமை வழிபாடு செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பெரும்பிடுகு முத்திரையர் சதய விழாவை முன்னிட்டு பூமி அம்பலம் தலைமையில் நத்தம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் மாரியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாகச் சென்றனர். பால்குடம் ஊர்வலம் பஜார் தெரு, பேருந்து நிலையம், மீனாட்சிபுரம் வழியாக சேர்வீடு பிரிவு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரும்பிடுகு முத்திரையர் உருவப்படத்திற்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். பின்னர் சதய விழா நினைவாக மரக்கன்றுகளையும் நட்டு வைத்தனர்.

படவிளக்கம் : நத்தத்தில் நத்தத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்திரையர் சதய விழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.

Dr.A.R.Vijyashankar / Editor