January 15, 2026

கடலூரில் பள்ளிக்கல்வி துறை சார்பில் கலை வல்லுநர்களுக்கு பரிசளிப்பு விழா

கடலூர்.ஜுன்.23. கடலூர் மாவட்டம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை கலைத்திருவிழா 2023-2024 ஆண்டு மாவட்ட அளவில் நடைபெற்ற கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மருத்துவர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனி வரவேற்றார். விழாவில் கலை வல்லுநர்கள் நடுவராக கலைப் பணியாற்றிய கலைஞர்கள் கலைச்சுடர் மணி குணாளன், கலைநன்மணி சிவனேசன் ,மணிபாலன், பாண்டுரங்கன், பழனிசாமி, பத்மநாபன், ராஜகுரு ,சுரேஷ், கண்ணன் ,ரேவதி ,பிரியங்கா , கலைவளர்மணி வசீகரன், சத்தியமூர்த்தி ,முகிலவன், தளிர்வேந்தன், தினேஷ் பங்கு பெற்ற கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரப் படுத்தப்பட்டது