திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுலா தலமான சாத்தனூர் அணையும் ஒன்று இந்த அணையில் இதன் 119 அடி கொண்ட கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 82 அடியாக உள்ளது இங்கு பொதுப்பணித் துறை, காவல் அலுவலகம், தபால் அலுவலகம் என இவைகள் அனைத்தும் இடங்களும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆசியாவிலே முதலை பண்ணை இங்கு உள்ளது சிறிய பெரிய முதலைகள் என 378 முதலைகள் மேல் உள்ளது இந்த முதலை பண்ணையில் உயர் ரக மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றது இந்த முதலை பண்ணை வளாகத்தில் உயர் ரக மரமான சந்தன மரம் சுமார் 80 இன்ச் மரம் என கூறப்படுகிறது கடந்த புதன் கிழமை இரவு வன காவலர் சேகரன் மட்டும் காவலுக்கு இருந்துள்ளார் அன்று இடியுடன் கூடிய மழை பெய்தது இரவு 10 மணியளவில் 4 பேர் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சேகரனை தாக்கி கை கால் கட்டி போட்டு விட்டு வளாகத்தில் உள்ள சந்தன மரத்தை மரம் வெட்டும் இயந்திரத்தை கொண்டு மரத்தை துண்டு துண்டுகளாக வெட்டி மர்ம நபர்கள் வாகனத்தில் எடுத்து சென்றுள்ளனர்.
இரவு தற்காலிக பணியாளர் மழை பெய்ததால் 11 மணிக்கு மேல் வந்துள்ளார் அங்கு இரவு காவலர் சேகரனை கட்டி போடப்பட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார் கட்டி போட்ட சேகரனை அவிழித்து விட்டு நடந்ததை கூறியுள்ளார் உடனடியாக இது குறித்து வனசரக அலுவலர் ராஜராஜன், மாவட்ட வன அலுவலர் யோகேஷ் கர்க், சாத்தனூர் அணை காவல் நிலையம் ஆகியோர்க்கு தொலைபேசியில் தகவல் கொடுக்கப்பட்டது.
நேரில் வந்து பார்வையிட்ட அலுவலர்கள் முதலை பண்ணையில் வேலை செய்யும் ஊழியர்களை தனி தனியாக விசாரணை நடத்தினர் பின்பு சாத்தனுர் அணை முகப்பு வழியில் உள்ள சிசிடிவி பதிவுகளை வன துறை அதிகாரிகள் , சாத்தனூர் காவல் ஆய்வாளர் ஆய்வு செய்தனர் காவலளியை கட்டி போட்டு சந்தன மரத்தை வெட்டி சென்றது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது முதலை பண்ணை வன சரக அலுவலர் ராஜராஜன் இதை பற்றி கூறுகையில் முதலை பண்ணியில் இருந்த சந்தன மரத்தை வெட்டியா மர்ம நபர்களை கண்டுபிடிக்க மாவட்ட வன அலுவலர் யோகேஷ் கர்க் அவர்களின் உத்தரவின்பேரில் சாத்தனூர் அணை வன சரக அலுவலர் சீனிவாசன் அவர்களின் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டு சந்தன மரத்தை வெட்டி எடுத்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர் கூடிய விரைவில் சந்தன மரத்தை வெட்டியா மர்ம நபர்களை கைது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
அருண்குமார்
செய்தியாளர் போர்முனை
தண்டராம்பட்டு
More Stories
ஜவ்வாது மலையில் அரசு மானியங்கள் குறித்த விளக்கவுரை
ஜமுனாமுத்தூர் சாலையில் ஒற்றைக் காட்டு யானை
கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வ தேச சதுரங்க தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைப்பெற்றது.