October 6, 2025

அடிப்படை வசதியின்றி தவிக்கும் ஜவ்வாது மலைவாழ் மக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியம் பலாமரத்தூர் ஊராட்சிக்குட்பட்ட நாச்சமலை கிராமம் புளிச்ச கொட்டை கிராமம் வாழக்காடு கிராமம் உள்ளிட்ட 10 க்கு மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன அடிப்படை சாலை வசதிகள் இல்லாமல் மலைவாழ் மக்கள் கடும் அவதிப்படுகின்றார்கள் மேலும் வாழக்காடு கிராமத்தில் வனத்துறை நடுநிலைப்பள்ளி உள்ளது ஆசிரியர்கள் மழைக்காலங்களில் தினமும் அந்த வழியில் வந்து போக மிகவும் சிரமப்படுகிறார்கள் அதனை கருத்தில் கொண்டு மலைவாழ் மக்கள் விடுத்த கோரிக்கையை உடனே நிறைவேற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க மலைவாழ் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.