
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சியை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.15000 மாணவ மாணவிகள் வாசித்தனர் சட்ட மன்ற உறுப்பினர் மாணவர்களுடன் சேர்ந்து தரையில் அமர்ந்து புத்தகம் வாசித்ததால் மாணவர்கள் நெகிழ்ச்சி

.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வேலாடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை வட்டார கிளையின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற என்ற நிகழ்ச்சியை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் ஏழாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி கல்லூரியின் விளையாட்டு அரங்கத்தில் வரும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 5 வரை 10 நாள்கள் நடைபெறவுள்ளது. இதனையொட்டி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாசிக்கும் பழக்கத்தை அதிகரிப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் இன்று மாவட்டம் முழுவதும் புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற நிகழ்வு நடைபெற்றது.
இதில் கந்தர்வகோட்டை ஒன்றிய அளவில் நடைபெற்ற புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சியை கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை மாணவர்களுடன் மாணவராக தரையில் அமர்ந்து வாசித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் இன்று ஒரு மணி நேரம் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெருகிறது என்றும்
இதில்
வேலாடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நடைபெற்ற புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு நிர்மல்ராஜ் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குமார், பள்ளி மேலாண்மை குழு தலைவி
அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் துரையரசன், கந்தர்வகோட்டை வட்டார செயலாளர் ரகமதுல்லா, ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன்,உதவி தலைமை ஆசிரியர் கணேசன் பூபதி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர்களையும் சேர்த்து சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற நிகழ்ச்சி மூலம் வாசித்தனர்.
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா புதுக்கோட்டையை அறிவுச் சமூகமாக மாற்றுவதற்கு தொடர்ந்து முயல்கிறது என்றும், மாணவர்கள், பொதுமக்கள் இப்புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கி படித்து வருங்காலத்தில் சிறந்த அரசியல் தலைவர்கள், பொருளாதார அறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள் உள்ளிட்ட அரசு உயர் பொறுப்புகளுக்கு வர பல்வேறு தலைப்புகளில் இருக்கும் புத்தகங்களை வாங்கி வாசித்து வளர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் கந்தர்வகோட்டை ஒன்றிய பெருந்தலைவர் ரத்தினவேல் என்ற கார்த்திக் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினார். நிகழ்ச்சிகளை அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட தலைவர் முத்துக்குமார் ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் குணசேகரன், அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை வட்டார பொருளாளர் தங்கராசு அனைவருக்கும் நன்றி கூறினார்.
மேலும் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி, தலைமையாசிரியர் விஜயலட்சுமி, கந்தர்வகோட்டை தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதுக்கோட்டை வாசிக்கிறது என்று நிகழ்ச்சி கலந்து கொண்டனர்.
ஆ.இர.விஜயஷங்கர்
ஆசிரியர் - போர்முனை


More Stories
Еженедельные акции в казино Pinco: как не упустить шанс?
Скачать Мостбет Приложение Для Android И Ios
mostbet এর কাজ কি: সদস্য হওয়ার প্রয়োজন কি?