
பண்ருட்டி.ஜூலை.09. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ( டிட்டோ ஜாக்) பண்ருட்டி வட்டாரம் சார்பில்வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு கோரிக்கை வலியுறுத்தி இரண்டாம் நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் தமிழ் ஐயா தலைமை தாங்கினார். தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் பரத சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். அரசாணை 243 ஐ தமிழக அரசு ரத்துசெய்யவேண்டும், பதவி உயர்வு கலந்தாய்வு பழைய நடைமுறை பின்பற்ற வேண்டும், ஆசிரியர்களும் பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்பது உட்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
மாவட்ட நிர்வாகி நாராயண மூர்த்தி நன்றி கூறினார்.
முருகானந்தம்
செய்தியாளர் மக்கள் குத்து
கடலூர்


More Stories
Steps to build a powerful profile on Filipino dating apps
Indonesian dating apps vs Indonesian dating sites: which performs better?
Exploring Legit Sugar Daddy Apps That Send Money