
பண்ருட்டி. ஜூலை.09. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மருங்கூர் அகழாய்வில் பாணை ஓட்டினாலான வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டது. தமிழர்கள் பொதுவாக ஓய்வு நேரங்களில் தங்களது பொழுதுப்போக்கினை உடல் உழைப்புச் சார்ந்த மற்றும் அறிவு சார்ந்த விளையாட்டுகளை விளையாடுவது வழக்கம். மருங்கூரில் வாழ்விடப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அகழாய்வில் கடந்த வாரம் இராசராசன் காலச் செம்புக் காசு கண்டெடுக்கப்பட்டது. தற்போது பல்வேறு அளவுகளில் பானை ஓட்டிலான வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பெண்களும், சிறார்களும் இந்த வட்டச்சில்லுகளைப் பயன்படுத்தி விளையாடியுள்ளனர். இத்தகைய விளையாட்டுகள் பாண்டி அல்லது நொண்டி விளையாட்டு என்று தற்போது அழைக்கப்படுகிறது. வட்டச்சில்லுகள் கண்டறியப்பட்டுள்ளதன் வாயிலாக தற்போது அகழாய்வு செய்யப்படும் இடம் வாழ்விடப்பகுதிதான் என்பதை உறுதி செய்கின்றது.
முருகானந்தம்
செய்தியாளர் மக்கள் குத்து
கடலூர்


More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line