
திருப்பூரில் அருகே நடுராத்திரியில் வீடுகள் மீது கல்வீச்சு!.. பொது மக்கள் திக் திக் ஒருவேளை குட்டிச்சாத்தானா?
திருப்பூர் மாவட்டம், படியூர் ஊராட்சியில் ஒட்டப்பாளையம் கிராமத்தில் கடந்த 15 நாட்களாக நடுராத்திரியில் வீடுகளின் மீது கற்கள் விழுகிறது. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் அருகில் உள்ள கோயிலில் தஞ்சம் புகுந்துள்ளனர். அங்கேயே சமைத்து சாப்பிடும் நிலைமை கூட உருவாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் ஒட்டப்பாளையம் பிர்கா வருவாய் கிராமத்துக்கு உள்ளடங்கிய 60 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கடந்த 15 நாட்களாக இரவு 7 மணி முதல் இரவு 12 மணி வரை வீடுகளின் மேல் கல்வீச்சு நடப்பதாக தெரிவிக்கிறார்கள்.
அந்த கற்களை யார் வீசுகிறார்கள் என தெரியவில்லை என்றும் சொல்கிறார்கள். ஒவ்வொரு வீடாக கற்கள் விழ ஆரம்பித்ததால் 9 வீடுகளில் மேல் போடப்பட்டுள்ள ஓடுகள் உடைந்து சேதமடைந்தது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த அமானுஷ்ய திக் திக் சம்பவம் நடுவராத்திரியில் விழுந்த கற்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் உள்ள கோயிலில் தங்கி சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தூக்கத்தை தொலைத்துவிட்டு கற்களை யார் வீசியது என தேடியும் யாரும் சிக்கவில்லை. இது குறித்து படியூர் ஊராட்சி மற்றும் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் ஊராட்சி தலைவர், காங்கேயம் காவல் நிலையம் போலீஸார் சம்பவ இடத்தில் உள்ளனர். ஆனாலும் கற்கள் வந்து விழுகிறது, அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்கிறார்கள். இரவு மட்டுமல்லாமல் பகலிலும் வீடுகள் மீது கற்கள் விழுந்ததாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள். இதையடுத்து மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் கிராமத்தின் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
20 போகஸ் லைட்டுகள் வைக்கப்பட்டு கிரேன்கள் மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறது. இதுகுறித்து மக்கள் கூறுகையில் எத்தனை நாளைக்குத்தான் கல்லடி வாங்குவது, வேறு ஊருக்கு சென்றுவிடலாம் போலிருக்கிறது. 15 நாட்களுக்கு மேலாக நாங்களும் தூக்கத்தை தொலைத்து விட்டோம். யார் கல் வீசுகிறார்கள் என பார்த்தோம். ஆனால் எதுவும் தெரியவில்லை.
இனியாவது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு நேரங்களிலும் டிரோன் கேமரா மூலமும் கிராமத்தை கண்காணித்து வருகிறார்கள். அவ்வாறு கண்காணித்தும் கற்கள் விழுகின்றன. அந்த கல் எங்கிருந்து விழுகிறது என தெரியவில்லை. கல் வீசுவது மனுஷனா இல்லை குட்டிச் சாத்தானா என தெரியவில்லை. போலீஸார் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். விரைந்து கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும் என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.
முன்னொரு காலத்தில் பேய் பிசாசு குட்டிச்சாத்தான் ஜெகன்மோகினி குட்டிச்சாத்தான்கள் மக்களை ஆட்டி படைத்த சம்பவமும் அதேபோன்று திரைப்படங்களிலும் காண்றிருப்போம் அதேபோன்று திருப்பூர் அருகே ஓட்டு வீடுகளின் மேல் கல் வீசப்படுவதும் அமானுஷ்ய சக்தி அல்லது குட்டிச்சாத்தான் அட்டகாசம் என அப்பகுதி மக்கள் சரி வாரியாக தூக்கமின்றி எந்நேரமும் திக் திக் சம்பவம் நடுவராத்திரியில் நடைபெறுவது வழக்கம் தொடர்கிறதாக தெரிவிக்கின்றனர்
ஆ.இர.விஜய ஷங்கர்
ஆசிரியர் - போர்முனை


More Stories
Steps to build a powerful profile on Filipino dating apps
Indonesian dating apps vs Indonesian dating sites: which performs better?
Exploring Legit Sugar Daddy Apps That Send Money