November 17, 2024

பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் ஆலய விமான பாலாலயம்

பண்ருட்டி. ஜூலை.12. கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் திருவதிகை பெரிய நாயகி அம்மன் உடனுறை வீரட்டானேஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் நிறைவுபெற்றதை தொடர்ந்து
விமான பாலாலய கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு இரண்டாம் கால யாக பூஜைகள், விசேஷ திரவியாஹூதி, மகா பூர்ணாஹூதி , மஹா தீபாராதனை நடைபெற்றது. காலை 8 மணிக்கு கடம் புறப்பாடாகி ராஜ கோபுரம், 2 ஆம் நிலை கோபுரம், அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் விமானங்களின் பாலாலய கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நகர மன்ற தலைவர் ராஜேந்திரன், செயல் அலுவலர் தின்ஷா, எஸ். வி. ஜுவல்லரி வைரக்கண்ணு, அருள், வள்ளி விலாஸ் சரவணன், மோகன கிருஷ்ணன், லஷ்மி ரங்கா எண்டர்பிரைசஸ் விஜயரங்கன், வினோத் குமார், மாதவன், சபாபதி, ராஜா, பாண்டுரங்கன், கணேசன், ஐய்யப்பன், தாடி முருகன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், உபயதிருப்பணி நன்கொடையாளர்கள், உற்சவதாரர்கள், ஆலய நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முருகானந்தம்
செய்தியாளர் மக்கள் குத்து
கடலூர்