கண்ணாடி முகப்பில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம் விதிக்கப்படும்- தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.
பாஸ்டேக் ஸ்டிக்கர் தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டுள்ளது.
🚗 வாகனத்தின் முகப்பு கண்ணாடியின் உள் பக்கத்தில் பாஸ்டேக் வில்லைகள் ஒட்டாமல் வாகன ஓட்டிகள் வருவதால் சுங்க சாவடிகளில் காலதாமதம் ஏற்படுகிறது.
🚗 இது இதர வாகனங்களில் வருபவர்களுக்கு அசவுகர்யத்தை ஏற்படுத்துகிறது.
🚗 இதையடுத்து கண்ணாடியின் முகப்பில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்க சுங்க சாவடிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
🚗 கண்ணாடியின் முகப்பில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து சுங்க சாவடிகளிலும் அறிவிப்பு பலகையில் தகவல் எழுதி வைக்க வேண்டும்.
🚗 பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாமல் வரும் வாகனங்களின் பதிவு எண்களை சுங்க சாவடிகளில் பதிவு செய்திருக்க வேண்டும்.
🚗 இதன் மூலம் இரு மடங்கு கட்டண வசூல் மற்றும் சுங்க சாவடியில் வாகன வரிசையில் குறிப்பிட்ட வாகனம் வந்ததற்கான அத்தாட்சியாக அது இருக்கும்.
More Stories
ஜவ்வாது மலையில் அரசு மானியங்கள் குறித்த விளக்கவுரை
ஜமுனாமுத்தூர் சாலையில் ஒற்றைக் காட்டு யானை
கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வ தேச சதுரங்க தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைப்பெற்றது.