
பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.264.15 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடங்கள், கல்வி அலுவலகக் கட்டடங்கள், புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்கள் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (19.7.2024) தலைமைச் செயலகத்தில். பள்ளிக்கல்வித் துறை சார்பில், 264 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 956 புதிய வகுப்பறைக் கட்டடங்கள். 12 ஆய்வகக் கட்டடங்கள். தகைசால் பள்ளிகளில் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்கள் மற்றும் திருவண்ணாமலையில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கல்வி வளாகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனிற்காக பள்ளிகளில் இணைய வசதி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து, தமிழகத்தின் கல்வித் தரத்தினை உயர்த்திட இல்லம் தேடி கல்வி. நம் பள்ளி நம் பெருமை, எண்ணும் எழுத்தும். நம்ம ஸ்கூல் பவுண்டேசன், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு போன்ற சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துதல். பள்ளிகளின் வகுப்பறைக் கட்டடங்கள். குடிநீர் வசதி, கழிவறைகள், மின்சாதன வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், திறன் வகுப்பறைகள் அமைத்தல், காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
கட்டி முடிக்கப்பட்ட பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் கல்வி அலுவலகக்
கட்டடங்களை திறந்து வைத்தல்
அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பேராசிரியர் அன்பழகன் பள்ளி
மேம்பாட்டுத் திட்டத்தை வேலூரில் நடைபெற்ற விழாவில் 1.2.2023 அன்று
தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் 2022-23 மற்றும் 2023-24ஆம் ஆண்டுகளில்
ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும், அரசு உயர்நிலை
மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்
பொருட்டு ரூ.1,887.75 கோடியும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின்
பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக ரூ.316 கோடியும் ஒதுக்கீடு
செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பள்ளிக்கல்வித் துறையில் 114 கோடியே 29 இலட்சம் ரூபாய் செலவில் 26 மாவட்டங்களில் உள்ள 106 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 515 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் 12 ஆய்வகக் கட்டடங்கள்:
தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் குழந்தை நேய வகுப்பறை கட்டும் திட்டத்தின் கீழ். 68 கோடியே 66 இலட்சம் ரூபாய் செலவில் 25 மாவட்டங்களில் உள்ள 176 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 441 வகுப்பறை கட்டடங்கள்;
தமிழ்நாட்டின் 28 மாவட்டங்களில் இயங்கி வரும் 28 தகைசால் பள்ளிகளில் 61 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்கள்;
திருவண்ணாமலையில் 19 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கூட்ட அரங்குகள், அலுவலக அறைகள், காணொலிக் கூடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கல்வி வளாகம்;என மொத்தம் 264 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு. எஸ். ரகுபதி, மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா. இ.ஆ.ப.. பள்ளிக்கல்வித் துறை செயலாளர் திருமதி. எஸ். மதுமதி, இ.ஆ.ப., ஒருங்கிணைந்த கல்வி மாநில திட்ட இயக்குநர் மரு. மா. ஆர்த்தி, இ.ஆ.ப., பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் திரு. பூ.ஆ. நரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சரவணன்
செய்தியாளர் போர்முனை
திருவண்ணாமலை


More Stories
Steps to build a powerful profile on Filipino dating apps
Indonesian dating apps vs Indonesian dating sites: which performs better?
Exploring Legit Sugar Daddy Apps That Send Money