கந்தர்வகோட்டை அருகே மட்டங்கால் கிராமத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை பார்வையிட்டு ஆலோசனை.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கந்தர்வகோட்டை அருகே மட்டங்கால் கிராமத்தில் நடைபெற்று வரும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். புதிய பாரத எழுத்தறிவு திட்டம் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுக்க ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். இத்திட்டத்தில் வங்கிகளில் பணம் எடுத்தல், படிவங்களை நிரப்புதல், வாசித்தல், எழுதுதல் அடிப்படை கணக்குகள் உள்ளிட்டவை கற்பிக்கப்படுகிறது. பொதுமக்கள் இத்திட்டத்தை பயன்படுத்தி எழுத படிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். கந்தர்வகோட்டை இல்லம் தேடி கல்வித் திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரஹ்மத்துல்லா புத்தக திருவிழாற்கான பிரசுரங்களை வழங்கி பேசும் பொழுது புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தக்கூடிய ஏழாவது புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வதற்கான துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி வாசிக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் புத்தக திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என பேசினார். இந்நிகழ்வில் தன்னார்வலர் சிந்துநதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
More Stories
ஜவ்வாது மலையில் அரசு மானியங்கள் குறித்த விளக்கவுரை
ஜமுனாமுத்தூர் சாலையில் ஒற்றைக் காட்டு யானை
கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வ தேச சதுரங்க தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைப்பெற்றது.