November 21, 2024

கந்தர்வகோட்டை இல்லம் தேடிக் கல்வி மையத்தில் புத்தகத் திருவிழாவிற்கான துண்டு பிரசுரம்

கந்தர்வகோட்டை இல்லம் தேடிக் கல்வி மையத்தில் புத்தகத் திருவிழாவிற்கான துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

கந்தர்வ கோட்டை ஜீலை 21.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் இந்திரா நகர் குமரன் காலனி இல்லம் தேடி கல்வி மையத்தில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தக்கூடிய ஏழாவது புத்தக திருவிழாவிற்கான துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தன்னார்வலர் சரண்யா அனைவரையும் வரவேற்றார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.
கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரஹ்மத்துல்லா பேசும்பொழுது

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தக்கூடிய ஏழாவது புத்தக திருவிழா ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 05 வரை மாமன்னர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. புத்தகத் திருவிழாவில் அனைவரும் கலந்து கொள்ளும் விதமாக கந்தர்வு கோட்டை ஒன்றியத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி துண்டு பிரசுரங்கள் வழங்குதல் நடமாடும் நூலக பேருந்து புத்தகத் திருவிழாவிற்கான கலை இலக்கிய போட்டிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையாக புத்தகத் திருவிழாவிற்கான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா புதுக்கோட்டையை அறிவுச் சமூகமாக மாற்றுவதற்கு தொடர்ந்து முயல்கிறது என்றும், மாணவர்கள், பொதுமக்கள் இப்புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கி படித்து வருங்காலத்தில் சிறந்த அரசியல் தலைவர்கள், பொருளாதார அறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள் உள்ளிட்ட அரசு உயர் பொறுப்புகளுக்கு வர பல்வேறு தலைப்புகளில் இருக்கும் புத்தகங்களை வாங்கி வாசித்து வளர வேண்டும் என்று பேசினார். புத்தகத் திருவிழா நடக்கும் நாளில் கந்தர்வகோட்டை ஒன்றியத்திலிருந்து மாணவ, மாணவிகள் புத்தகத் திருவிழாவிற்கு சென்று வர பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். ‌