கந்தர்வக்கோட்டை ஜீலை 23.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் காட்டு நாவல் , மட்டங்கால் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வதேச சதுரங்க தினத்தை முன்னிட்டு சதுரங்க போட்டி நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் தன்னார்வலர் காயத்ரி அனைவரையும் வரவேற்றார்.
கந்தர்வக்கோட்டை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது
1924ம் ஆண்டு உலக சதுரங்க கூட்டமைப்பு பாரிஸ் மாநகரில் உருவாக்கப்பட்டதன் நினைவாக ஜூலை 20ம் தேதியை உலக செஸ் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று 2019ம் ஆண்டு யுனெஸ்கோ முன்மொழிந்து தற்போது பல்வேறு நாடுகளில் முன்முயற்சியின் பேரில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
உலக சதுரங்க தினத்தின் சிறப்பு என்பது வெறும் பொழுதுபோக்குக்காக விளையாடும் விளையாட்டு மட்டுமல்ல. அறிவியல் சிந்தனை, கணிதம், கூர்நோக்கு , அமைதி, பொறுமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இதில் உள்ளது. எனவே, இந்த நிகழ்ச்சியை கொண்டாடுவதன் மூலம் யுனெஸ்கோ உலக அமைதி, சமத்துவம், உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் வலியுறுத்துகிறது.
2024 உலக சதுரங்க தினத்திற்கு கருப்பொருள் அனைவருக்கும் சதுரங்கத்தை கற்பிப்பதன் குறிக்கோள் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை விட 2024 உலக சதுரங்க தினத்தின் குறிக்கோள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும், உலக சதுரங்க தினத்தை கௌரவிக்க இதே கருப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. சதுரங்கம் என்பது ஒரு உலகளாவிய விளையாட்டாகும், இது நேர்மை, உள்ளடக்கம் மற்றும் பிறருக்கு மரியாதை ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. இந்த விஷயத்தில் இது குறிப்பிடத்தக்கது, ஏனெனில் இது சகிப்புத்தன்மை மற்றும் சர்வதேச புரிதலின் சூழலை ஆதரிக்க முடியும் என்று பேசினார்.நிறைவாக தன்னார்வலர் சுமதி நன்றி கூறினார்.
More Stories
ஜவ்வாது மலையில் அரசு மானியங்கள் குறித்த விளக்கவுரை
ஜமுனாமுத்தூர் சாலையில் ஒற்றைக் காட்டு யானை
கந்தர்வகோட்டை இல்லம் தேடிக் கல்வி மையத்தில் புத்தகத் திருவிழாவிற்கான துண்டு பிரசுரம்