November 20, 2024

விவசாயிகளுக்கு தேனி வளர்ப்பு பயிற்சி

விவசாயிகளுக்கு தேனி வளர்ப்பு பயிற்சி பென்னாகரம் வட்டாரத்தில் கோடாரம்ப்பட்டி நெருப்பூர் மற்றும் கொட்லுமராம்பட்டி கிராமங்களில் வேளாண்மை துறை சார்பில் ஆட்மா திட்டத்தின் மூலம் தேனி வளர்ப்பு முறைகள் குறித்த செயல் விளக்கம் அளித்தனர். முழு மானிய விலையில் விவசாயிகளுக்கு தேனீ பெட்டி மற்றும் இதர இடுபொருட்கள் வழங்கப்பட்டது விவசாயிகள் தங்கள் தென்னை மரம் வாழை மரம் மற்றும் இதர பயிர்களில் தேனி வளர்ப்பு செய்வதால் அயல் மகர்ந்த சேர்க்கை திறன் அதிகரிக்கப்பதனால் மகசூல் அதிகரிக்கும் மேலும் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும், தேனி பெட்டி பராமரிப்பு முறைகள் பற்றிய செயல் விளக்கம் மூலம் விவசாயிகளுக்கு உதவி வேளாண் அலுவலர் ரஞ்சித் மற்றும் ஆட்மா திட்ட பணியாளர்கள் வட்டார தொழில் நுட்ப மேலாளர், உதவி தொழில்நுட்ப மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் எடுத்து கூறினார்.

ஆ.இர. விஜயய்ஷங்கர்/ஆசிரியர்