January 15, 2026

பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி

பண்ருட்டி. ஜுன்.12. கடலூர் மாவட்ட‌ம் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433 பசலி ஆண்டுக்கான


வருவாய் தீர்வாயத்தை (ஜமாபந்தி ) நடைபெற்றது. முதல் நாளான நேற்று கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா
நெல்லிக்குப்பம் குருவட்டம் கொங்கராயனுர், சன்யாசி பேட்டை, பாலூர், மேல் கவரப்பட்டு, சித்தரசூர், மேல்பாதி, கீழ் பாதி, சாத்திப்பட்டு, பலாப்பட்டு, சிறு நங்கை வாடி ஆகிய கிராம கணக்குகளை ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து 52 மனுக்கள் பெறப்பட்டது. பண்ருட்டி வட்டாட்சியர் ஆனந்த், தனி வட்டாட்சியர் பிரகாஷ் துணை வட்டாட்சியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆ.இர. விஜய்ஷங்கர்/ஆசிரியர்