
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பில்லியப்பா நகர் பகுதிச் சேர்ந்தவர் ரகோத்தமன்(54வயது). சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக பணியாற்றி வருபவர் இதே போன்று வாலாஜாபேட்டை அடுத்த பூண்டி கிராம பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன்(54வயது), ஓய்வு பெற்ற ராணுவவீரர் ஆவார். இந்த நிலையில் ரகோத்தமன் மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இருவரும் இணைந்து மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வாலாஜாபேட்டை அடுத்த பூண்டி பகுதியில் உள்ள ராஜேந்திரனின் வீட்டில் ரகோத்தமன் மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும்
வழக்கம் போல மது அருந்தி கொண்டிருக்கும் போது திடீரென இருவருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதமானது. ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி உள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ராஜேந்திரன் கீழே இருந்த கட்டையை எடுத்து ரகோத்தமன் தலை மீது பலமாக தாக்கியதில் இடத்திலேயே ரகோத்தமன் ரத்தம் வெளியேற சுயநினைவு
இன்றி மயங்கி விழுந்துள்ளார்.
இதனைதொடர்ந்து சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த ரகோத்தமனை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நிலையில் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ரகோத்தமன்
ஏற்கனவே உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாலாஜாபேட்டை காவல் ஆய்வாளர் சால்மன்ராஜா, உதவி ஆய்வாளர் மகாராஜன் மற்றும் காவல் துறையினர் ரகோத்தமனை தாக்கி கொலை செய்த குற்றத்திற்காக ராஜேந்திரனை
கைது செய்து வழக்குப் பதிவும் செய்யப்பட்டு ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர் 24 மணிநேரத்தில் குற்றவாளியை பிடித்த வாலாஜா காவல் நிலைய காவல்துறையினரை சமுக ஆர்வலர்கள் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆ.இர.விஜயஷங்கர்
ஆசிரியர் - போர்முனை

More Stories
Еженедельные акции в казино Pinco: как не упустить шанс?
Скачать Мостбет Приложение Для Android И Ios
mostbet এর কাজ কি: সদস্য হওয়ার প্রয়োজন কি?