செங்கத்தில் தவறவிட்ட 2 லட்சம் ரூபாயை 1 மணி நேரத்தில் கண்டுபிடித்த இரண்டு காவலருக்கு செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் பாராட்டு தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்புழுதியூர் பகுதியைச் சேர்ந்தவர் சலீம்பாஷா. இவர் செங்கத்தில் எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது வீட்டில் இருந்து எலக்ட்ரிக் பொருட்கள் கொள்முதல் செய்வதற்காக துணிபையில் இரண்டு லட்சம் ரூபாய் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை கொண்டு வந்திருக்கிறார். அப்பொழுது வரும் வழியில் பணத்தை தவறவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் அவர் வந்த பாதையில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக மிதிவண்டியில் வந்த மேல்செங்கம் புதூர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் சலீம் பாஷா தவற விட்ட பணப்பையை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
பின்னர் அவரை அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அவரிடம் இருந்த பணப்பையை புகார் கொடுத்த ஒரு மணி நேரத்தில் காவல் துறையினர் கண்டுபிடித்தனர். அதை தொடர்ந்து பணத்தை தவறவிட்ட சாதிக் பாஷாவிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.
இதில் துரிதமாக செயல்பட்ட சந்துரு மற்றும் மாதேஷ், ஆகிய இரண்டு காவலருக்கு செங்கம் டி.எஸ்.பி. தேன்மொழிவேல் சன்மானம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
செந்தில்குமார்
திருவண்ணாமலை
More Stories
ஜவ்வாது மலையில் அரசு மானியங்கள் குறித்த விளக்கவுரை
ஜமுனாமுத்தூர் சாலையில் ஒற்றைக் காட்டு யானை
கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வ தேச சதுரங்க தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைப்பெற்றது.