
நத்தம்,மே.22:
நத்தம் அருகேயுள்ள வீமாஸ்நகரில்
இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், அழகர்கோவில் -தொப்புலாம்பட்டியை சேர்ந்தவர் மலையாளன் (60). இவரது மனைவி சின்னப்பொண்ணு (53). இவர் கடந்த 17-ஆம் தேதி தனது மகன் மூர்த்தி மற்றும் பேரன் அருண்குமாருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து சாணார்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். இருசக்கர வாகனத்தை மூர்த்தி ஓட்டி சென்றார்.மதுரை சாலையில் உள்ள வீமாஸ்நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை
இழந்த இருசக்கர வாகனம் திடீரென சாலையோரத்தில் கவிழ்ந்தது.இதில் பலத்த காயமடைந்த சின்னப் பொண்ணு
சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு
மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கபட்டார்.ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல்
சின்னப்பொண்ணு வியாழக்கிழமை காலை உயிரிழந்தார்.மேலும் இச்சம்பவம் குறித்து நத்தம் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Dr.ஆ.இர.விஜயஷங்கர்
More Stories
Pinco Mobil Casino Uygulaması: Eğlence Ve Kazanç Bir Arada
Pinco Mobil Casino Uygulaması: Eğlence Ve Kazanç Bir Arada
Mostbet, Mostbet Giriş, Mostbet Güncel Giriş Adresi